உலகப்புகழ் இயக்குநர் மஜித் மஜிதி பாராட்டில் ‘அக்கா குருவி’ திரைப்படம் !

சென்னை.

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க,  இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம்  ‘அக்காகுருவி’.  இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை,  பி வி ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக தான்  இப்படம் உருவாகியுள்ளது. ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன் தங்கை என இரு குழந்தைகளின் கதையாக,  மனதை உலுக்கும் அற்புத படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதி இசையமைத்துள்ளார். ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் ஒரிஜினல் இயக்குநர்,  உலகளவில் கொண்டாடக்கூடிய பல படைப்புகளை தந்த இயக்குநர் மஜித் மஜிதி இப்படத்தை பார்த்து விட்டு, பாராட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்

அக்கடிதத்தில்

என்னுடைய ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகியுள்ள ‘அக்கா குருவி’ படத்தை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி. ஒரிஜினலில் உள்ள உணர்வுகளை, கதையை இப்படத்தில் கையாண்ட விதம் அற்புதமாக இருந்தது. மிக உண்மையான மறு உருவாக்கமாக படம் அமைந்துள்ளது. கிளைக்கதையாக வரும் காதல் கதை, உங்கள் கலாச்சாரத்தோடு ஒத்துபோக கூடியதென்று நம்புகிறேன். இப்படத்தின் இசையை மிக மிக ரசித்தேன். கதையின் சாரத்தை வெளிப்படுத்தும் அற்புத இசை.  முடிந்தால் உங்கள் அனைவரையும் சந்திக்கவும், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன்.  இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி என்று தெரிவித்துள்ளார்.

‘அக்கா குருவி’  திரைப்படம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

“AKKA KURUVI” has been Praised by the World Renowned Iranian Director.

Akka Kuruvi is produced by Madurai Muthu Movies along with Kanavu Thozhirsalai and directed by Uyir,Mirugam Fame director Saamy.Akka Kuruvi is the official remake of one of the finest children film and oscar nominated film “Childrens Of Heaven”.The Audio Launch of this film happened at Chennai On April 25th.Actor Parthiban,Director Ameer and Actor Aadhi Participated in the function as the Chief Guests.When R.Parthiban gave his speech, he told Director Saamy has choosen a good story,a great music director and a good producer and this will lead the film to be successfull.

When Ameer spoke he praised that the songs of ilayaraja in this film are still running in his head.After watching the film isaignani ilayaraja told that director Saamy has made the film Akka kuruvi better than the original version. After watching the film,the director of “Childrens of heaven” Majid Majidi sent a praising letter to the team Akka Kuruvi.He told in the letter that Akka Kuruvi has done Justice to the original Version and it is very touching as well and he believes that the parallel love story in the film is made to be suitable for the indian culture.He Enjoyed the music by isaignani ilayaraja very much and he felt the music added more element to the film.He wish to be present at the Pre-Release Event of the film if possible.He wished the film to be Successfull and he shared his Best wishes to the Team.

 

"AKKA KURUVI" Movie NewsFeatured
Comments (0)
Add Comment