மீடியா பிரபலங்களுடன் கிரிக்கெட் சகோதரத்துவத்தை துவக்கிவைத்த நடிகை நிரோஷா ராதா!

சென்னை.

பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் என்கிற நிறுவனத்தின் மூலம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வரும்  நடிகை நிரோஷா ராதா, மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் என்கிற பிரமாண்ட கிரிக்கெட் நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை (30.04.22) அன்று போரூரில் நடத்தனார்.இந்த நிகழ்ச்சியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பங்குபெற்ற. இந்த டென்னிஸ் பால் விளையாட்டு போட்டியை விஜய் டிவியிலிருந்து மாகாபா, சித்தார்த், சன் டிவியிலிருந்து ஆர்யன், அசார் மற்றும் கோலிசோடா புகழ் கிஷோர் ஆகியோர் நட்சத்திர அணிகளை வழி நடத்தினர். சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், சன் சூப்பர் ஹீரோஸ், பீஸ்ட் பிளேயர்ஸ், சில்க் ஸ்மிதா, மாஸ்டர் பிளாஸ்டர்ஸ் மற்றும் ஒயிட் வாக்கர்ஸ் என்கிற 6 அணிகளுக்கிடையே 1௦ ஓவர்கள் கொண்ட போட்டியாக இது நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் மாகாபா தலைமையிலான சில்க் ஸ்மிதா அணியும், அசார் தலைமையிலான சன் சூப்பர் ஹீரோஸ் அணியும் மோதின. 9௦ நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் 14 ரன்கள் வித்தியாசத்தில் சன் சூப்பர் ஹீரோஸ் அணி வெற்றி பெற்று கோப்பையையும் 1.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் கைப்பற்றியது. சன் சூப்பர் ஹீரோஸ் அணியின் .அஜய்க்கு ‘மேன் ஆப் தி மேட்ச்’ பட்டம் அறிவிக்கப்பட்டதுடன் டெஸ்லாட் நிறுவனத்திடமிருந்து ஒரு கிக் ஸ்டார் சைக்கிளையும் பரிசாக பெற்றார்.

சில்க் ஸ்மிதா அணியை சேர்ந்த சுஜித் ‘மேன் ஆப் தி சீரிஸ்’ ஆக அறிவிக்கப்பட்டதுடன் சத்யா ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனத்தின் சார்பாக எல்ஜி குளிர்சாதன பெட்டி ஒன்றும் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் ஸ்பான்சர்களான மார்க் அணியின் திரு.மோகன் மற்றும் திரு சரவணன், யுவர் பேக்கர்ஸ் ஸ்பான்சரான திரு கிருஷ்ண ராஜூ ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினார்களாக கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பரிசுக்கோப்பை, பரிசுத்தொகை மற்றும் பரிசுப்பொருள்களை வழங்கி சிறப்பித்தனர்.

தமிழ் திரையுலகின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா ராதா 1988-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற அக்னி நட்சத்திரம் படத்தில் நடிகையாக அறிமுகமானதில் இருந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களிலும் மற்றும் பல சின்னத்திரை தொடர்களிலும் மேல் நடித்துள்ளார். நிரோஷா ராதாவால் திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்களை தயாரிக்கும் விதமாக துவங்கப்பட்ட இந்த பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் புதிய முயற்சியுடன் தனித்துவமான படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.. மேலும் பல சிறந்த கம்பெனிகளுடன் இணைந்து நல்ல பல தயாரிப்புகளை இந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது.

மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் என்பது திரையுலகில் இருக்கும் விளையாட்டு போட்டிகளில் ஈடுபாடு கொண்ட நபர்களின் ஆர்வத்தையும் வேட்கையையும் கொண்டாடி பகிர்ந்து கொள்ளும் விதமாக நடிகை நிரோஷா ராதாவால் துவங்கப்பட்டது. கொளுத்தும் இந்த கோடையிலும் தகிக்கும் வெயிலிலும் ரசிகர்களை இருக்காய் நுனியில் அமர வைக்கும் விதமாக பரபரப்பாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை கொண்டாட மீடியா உலகமும் இதில் ஒரு அங்கமாக கலந்துகொண்டது.

 

 

Actress Nirosha kickstarts a cricket fraternity with media celebrities NEWSFeatured
Comments (0)
Add Comment