இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்க ‘குலு குலு’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சென்னை.
நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குலு குலு’. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘ லொள்ளு சபா’ மாறன், ‘லொள்ளு சபா’  சேசு, டி எஸ் ஆர், பிபின், கவி, ஹரிஷ், யுவராஜ், மாரிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.   படத்தொகுப்பை பிலோமின் ராஜ் கவனித்திருக்கிறார்.இந்த திரைப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ராஜ் நாராயணன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

‘குலு குலு’ படத்தின் படபிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஆடியோ உரிமையை முன்னணி நிறுவனமான சோனி மியூஸிக் கைப்பற்றியிருக்கிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.  ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் சந்தானத்தின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருப்பதால் இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அத்துடன் சந்தானத்தின் ‘குலு குலு’ ஜுன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

 

 

'Gulu Gulu" Movie NewsFeatured
Comments (0)
Add Comment