‘விக்ரம்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், கமலை வைத்து பா.இரஞ்சித் இயக்கும் படம் குறித்து அறிவிப்பு..!

சென்னை

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், கமலை வைத்து பா.இரஞ்சித் இயக்கும் படம் குறித்து அறிவித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘விக்ரம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று அனைத்து ரசிகர்கள் மத்தியில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித், பார்த்திபன், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இயக்குனர் பா.இரஞ்சித், கமல்ஹாசன் நடிக்கும் படத்தை அவர் இயக்குவது குறித்த அறிவிப்பை மேடையில் பா.இரஞ்சித் அறிவித்தார். அப்பொழுது அவர் பேசியதாவது, ‘கமல்ஹாசன் சாருடன் இணைந்து விரைவில் பணியாற்றப் போகிறேன். மிகவும் ஆர்வத்துடன் உள்ளேன். அவரை வைத்து ஒரு மதுரைப் படம் பண்ணவே ஆசை. அவர் நடித்த ‘விருமாண்டி’ எனக்குப் பிடித்த படம். ஆனால் இதில் கமல் வேஷ்டி சட்டை உடன் வரமாட்டார் என்று கூறியுள்ளார். இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திலிருந்து கமல்ஹாசன் எழுதி பாடியிருந்த ‘பத்தல பத்தல’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பும் சர்ச்சைகளையும் சந்தித்தது.  இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப்பில் முதல் இடத்தில் உள்ளது.  கமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 1 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் முதல் இடத்தில் உள்ளது. அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான பெரிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

"VIKRAM" Movie NewsFeatured
Comments (0)
Add Comment