தென்னிந்திய திரைப்பட துறையில் நடிப்பில் கலக்கும் நடிகை ரிது வர்மா!

சென்னை.

தென்னிந்திய திரைத்துறையில் சிறந்த நடிகைகளில் ஒருவராக விளங்க கூடியவர் நடிகை ரிது வர்மா. நவநாகரீக நகர்ப்புற வேடங்களிலும் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற வேடங்களிலும் பொருந்தக்கூடிய அரிதானவர்களில் இவரும் ஒருவர். தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் கவனத்தைத் திருடியதில் இருந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் மக்களைக் கவர்ந்தது வரை, ரிது வர்மா ஒரு சிறந்த நடிகையாக தனது திறனை நிரூபித்துள்ளார். தற்போது, அவர் அடுத்தடுத்து மிக சுவராஸ்யமான பல படங்களில் நடித்து வருகிறார், அவை தயாரிப்பின்  பல்வேறு கட்டங்களில் உள்ளன.

தற்போது, நடிகை ரிது வர்மா,  விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்காக அடுத்த மாதம் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பைத் தொடங்குகிறார். அவர் ஓகே ஓக ஜீவிதம் (தெலுங்கு)- கானம் (தமிழ்) என்ற இருமொழித் திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுது, மேலும் இப்படம் விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இவர் அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் (தெலுங்கில் ஆகாசம்) படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரடக்சன்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரிது வர்மா தென்னிந்திய திரைத்துறையின் பல மொழிகளிலும் பணிபுரிவதால் மிக பிஸியான நடிகையாக மாறியுள்ளார். விரைவில் மலையாள திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Ritu Varma newsFeatured
Comments (0)
Add Comment