முதன் முறையாக தங்கர் பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் படம் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’.

சென்னை.

மனித உறவுகளை மய்யமாகக் கொண்ட அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான அழுத்தமான  திரைப்படங்களை தந்த தங்கர் பச்சான் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். அதற்கு ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்று பெயரிட்டுள்ளார். இப்படத்தை, வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் D.வீரசக்தி பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

இப்புதிய திரைப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவருமே இது வரை நடித்திராத அழுத்தமான கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்கள். மற்றொரு முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும்  நடிகையை, பிரபல நாயாகியாக தேர்வு செய்து வருகிறார்கள். மிக முக்கியமாக கருதும் இப்படத்தின் இசை அமைக்கும் பொறுப்பை ஜி.வி.பிரகாஷ் ஏற்றுள்ளார். முதன் முறையாக தங்கர் பச்சானுடன் இணைந்து பணிபுரிகிறார். பிரபலங்கள் N.K.ஏகாம்பரம் ( சோனி ஓடிடி -க்கு சேரன் இயக்கி வரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் ) ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் தங்கவேல் ( இந்தியன்2, அயலான் ) கலையை அமைக்கிறார்.

ஜூலை மாதம் 25 முதல் இரு கட்டங்களாக படப்பிடிப்புகள் தொடங்குகின்றன.  ஜி. வி. பிரகாஷ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் உருவாகி கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன.பிறர் அறியாத பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டு குற்ற உணர்வில் நிம்மதி இழந்து மன்னிப்புத்தேடி அலைபவனின் மனநிலைக்கு ஏற்ப பாடல் ஒன்றை எழுதி முடித்து ஈரம் காயாத விழிகளுடன் வைரமுத்து டிவிட்டரில் ..”தங்கர்பச்சான் இயக்க ஜி.வி.பிரகாஷ் இசைக்கும் படம் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ பாட்டெழுதும்போதே சொல்லோடு கசிந்தது கண்ணீர். விழுமியங்கள் மாறிப்போன சமூகத்திற்கு என்னோடு அழுவதற்கு கண்ணீர் இருக்குமா? இல்லை.. கண்களாவது இருக்குமா?..என அழுத்தமான மன உணர்வுகளை பதிவிட்டுள்ளார்.

வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் D.வீரசக்தி இப்படம் குறித்து,

“மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு இது. இக்கதையை கேட்ட மாத்திரத்திலேயே கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். அடுத்த நொடியே படத்தை தயாரிக்க முடிவெடுத்துவிட்டேன். இது தங்கர் பச்சானின் அழுத்தமான மற்றொரு படைப்பு. தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இது இருக்கும்..” என்று சொல்லியுள்ளார்.

தங்கர் பச்சான் இயக்கத்தில் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் “டக்கு முக்கு டிக்கு தாளம்” திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளுக்கிடையில் இப்புதிய திரைப்படத்தின் பாடல்களை உருவாக்கும் பணிகளை துவக்கியுள்ளார், தங்கர் பச்சான்.

For the first time ever G.V.Prakash is joining hands with Thangar Bachan for a film called ‘Karumegangal yaen Kalaiginrana ?’ Bharathiraja , yogi babu and Gautham Vasudev Menon are unitedly acting in this film.

Thangar Bachan who gave standard films which focus on human relationships like Azhagi, Solla Marandha Kadhai, Thendral, Pallikoodam, Onbadhu Roobai Nottu is now directing a new film. He has named the film as  ‘Karumegangal yaen Kalaiginrana ?’ The Film is produced by D.Veerasakthi under the banner VAU Media Entertainment.

In this new film BharathiRaja, Yogibabu and Gautham Vasudev Menon are playing a strong role they have never done before.Process for selecting a famous actress for an important role is going on. G.V.Prakash has taken the important role of scoring music for the film.He is working with Thangar Bachan for the first time. N.K.Ekhambaram (Nimir,Vinodhaya Sitham,Hungama 2) is doing the cinematography and Art direction is done by Muthuraj Thangavel (Bigil, Indian2, Ayalan)

The Shoot of the film will start in this july 25th with two schedules.The film which the music is scored by G.V.Prakash and lyrics by Vairamuthu is now in the process of auditioning for the other important cast and technicians. Vairamuthu has written a song about a person who has done a mistake which no one else knows and roaming with guilt for forgiveness.Vairamuthu has shared a deep message in twitter after writting the lyrics .

When i was writting the song for Thangar Bachan’s ‘Karumegangal Yaen Kalaiginrana ?’  my eyes filled with tears. Vilumiyangal Maaripona Samoogathirku Ennodu Aluvatharku Kaneer Irukuma? Illai Kangalavathu Irukuma?

He posted this deep heartfelt message in twitter.

The producer of VAU Media Entertainment D.Veerasakthi shared about this film as follows, This film depicts the wonderful relationship between humans. I cried at the moment when i heard the story.I decided the next second to produce the film.This is another deep emotional film of Thangar Bachan.This film be one of tamil cinema’s important film. Thangar Bachan is now working for the release of his  directorial film “Takku Mukku Tikku Thalam” starring his son Vijith Bachan as hero.In between this work he has started to work for making the songs for this film with G.V.Prakash.

 

FeaturedFor the first time ever G.V.Prakash is joining hands with Thangar Bachan for a film called 'Karumegangal yaen Kalaiginrana ?’ NEWS
Comments (0)
Add Comment