நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “பொம்மை” பட டிரைலர்!

சென்னை.

மறைந்த மூத்த இயக்குனர் எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த படம் ‘பொம்மை’. இப்படத்தின் மூலம்தான் கே.ஜே,யேசுதாஸ் பின்னணி பாடகராக அறிமுகமானார். தற்போது இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதே தலைப்பில் உருவாகியிருக்கும் ‘பொம்மை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.  இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இதன் டிரைலரை இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்தில் எஸ்.ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

"Pommai" Movie NewsFeatured
Comments (0)
Add Comment