இன்று பூஜையுடன் துவங்கிய இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு-ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் புதிய படம்!

சென்னை.

‘பத்ரா’, ‘துளசி’,’ சிம்ஹா’, ‘லெஜண்ட்’, ‘சரைனோடு’, ‘ஜெய ஜானகி நாயக’, மற்றும் சமீபத்தில் ‘அகண்டா’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய தென்னிந்திய சினிமாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவர் போயபத்தி ஸ்ரீனு. அவர் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘அகண்டா’ மிகப்பெரிய பிளாக்பஸ்டராக, திரையரங்குகள் மீண்டும் பழைய பொலிவை பெற்றது. ரசிகர்களின் ஆராவார வரவேற்பில், திரைத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

போயபத்தி ஸ்ரீனு அடுத்ததாக, உஸ்தாத் ராம்பொத்தினேனியுடன் இணைந்து தனது அடுத்த பான்-இந்தியன் படத்தை தொடங்கியுள்ளார். பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபத்தி ஸ்ரீனுவின்  10வது படமாக இப்படம் உருவாகிறது. இரண்டு அடுதடுத்த வெற்றிக்கு பிறகு, பிரபல தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி  Srinivasaa Silver Screens சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். தற்போதைக்கு ‘BoyapatiRAPO’ என இப்படம் தலைப்பிடப் பட்டுள்ளது. இத்தயாரிப்பு நிறுவனத்திற்கு இது 9வது படம். மேலும் பவன்குமார் இப்படத்தை வழங்குகிறார்.

தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி ஹீரோக்களில் ராம் பொதினேனியும் ஒருவர். அவரது வசீகரம், நளினம் மற்றும் அசத்தல்  நடிப்பால், அவர் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார். அவரது டப்பிங் படங்கள் யூடியூப்பில் பெரும் எண்ணிக்கையில் பார்வைகளை குவித்து சாதனை படைக்கின்றது.இந்த பிரமாண்டமான படம் ராம் பொதினேனியின் 20 வது படமாகும் மற்றும் அவர் சமீபத்தில் தான்  ‘தி வாரியர்’ படப்பிடிப்பை முடித்தார்.

இந்த பான்-இந்திய திரைப்படத்திற்கான திரைத்துறையின் மதிப்புமிக்க  பிரம்மாண்டமான மூவரின் கூட்டணி  மிகப்பெரிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் ஜூன் 1ஆம் தேதி  புதன்கிழமை ஹைதராபாத்தில் ‘மூஹூர்த்த’ பூஜையுடன் முறைப்படி தொடங்கப்பட்டது.

இப்படம் குறித்து ஸ்ரீனிவாசா சிட்தூரி கூறுகையில்..,

“போயபத்தி ஸ்ரீனுவின் இயக்கத்தில் இப்படத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ‘தி வாரியர்’ படத்திற்குப் பிறகு ராம் பொத்தினேனியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்கள் பேனரில் வரும் மதிப்புமிக்க படமாக இருக்கும். இந்த படத்தை நாங்கள் உயர் தொழில்நுட்ப தரத்துடன் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கிறோம். படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிட உள்ளோம் என்றார்.

தயாரிப்பாளர் மற்றும் நடிகர் இருவரையும் பரவசப்படுத்தும்  மாஸ் அம்சங்கள் நிறைந்த ஒரு அருமையான கதையுடன் வந்திருக்கிறார் போயபத்தி ஸ்ரீனு. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர்  விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளியிடப்படும்.

 

FeaturedThe Massive Combo BoyapatiRAPO film launched with Pooja ceremony News
Comments (0)
Add Comment