ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றும் தமிழ் பான் இந்தியா படம் ‘கஜானா’

சென்னை.

காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, முதல் முறையாக பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கிறார். ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பில் வளர்ந்து வந்த இப்படம் தற்போது ‘கஜானா’ என்ற பெயர் மாற்றத்துடன் பான் இந்தியா திரைப்படமாக ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான தரத்தில் சாகச காட்சிகள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது.

‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரம்மாண்டமான சாகச திரைப்படமாக உருவாகிறது. இதில் வேதிகா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை நடனத்திற்காக பாராட்டு பெற்ற வேதிகா, இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருப்பதோடு பல சாகச காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அந்த காட்சிகள் படத்திற்கு கூதல் பலம் சேர்த்திருப்பதோடு, ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.

வேதிகா ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருப்பதோடு, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழகில் கிரங்கடிக்கவும் செய்வார்.  மேலும், இனிகோ பிரபாகர், சாந்தினி, யோகி பாபு, பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார்.

VFX தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய முழு விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. இப்படத்தின் முந்தைய தலைப்பால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தற்போது ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவது மற்றும் பான் இந்தியா சாக திரைப்படமாக உருவாகி வருவது பற்றிய தகவல்கள் வெளியானதால் இப்படத்தை பற்றி கோலிவுட் பிரபலங்களும் பேச தொடங்கியிருக்கிறார்கள்.

 

 

FeaturedGajana Happy to announce gorgeous actress Vedhika news
Comments (0)
Add Comment