மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட “பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை.

Lights On  Media  வழங்கும், இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”. ‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’  எனும் கருத்தில், இளைஞர்கள் குழுவின் புது முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகும் “பருந்தாகுது ஊர்க்குருவி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டுவதோடு, பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இளம் படக்குழுவினரை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி “பருந்தாகுது ஊர்க்குருவி” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். பல புதிர்கள் நிறைந்த காட்டுக்குள் இருவர் மாட்டிக்கொள்ளும் சிக்கலான சூழலில், ஒருவர் மற்றொருவரை எப்படி காப்பாற்றுகிறார், அவர்கள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில்,  சர்வைவல் திரில்லர் பாணியில் சொல்வதே இப்படம்.

புத்தம் புதிய இளம் திறமையாளர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கி வருகின்றனர். நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கூடலூர்  மண்வயல் கிராமம் அருகே  மனிதர்கள் நடமாடாத இருள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் படக்குழு கடும் உழைப்பில் படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளது. இதுவரை திரையில் கண்டிராத புது அனுபவமாக இத்திரைப்படம் இருக்கும்.

இயக்குநர் ராம் அவர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கோ.தனபாலன் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும்  Lights On Media தனது முதல் படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா.P, வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழு:

ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல், எடிட்டர் – ( டான் படப்புகழ் )நாகூரான் ராமசந்திரன், இசை – ரெஞ்சித் உண்ணி (ஜிமிக்கி கம்மல் புகழ்), சண்டை காட்சிகள் – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – விவேக் செல்வராஜ், உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா, மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர். படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

‘Parundhaaguthu Oorkuruvi’ First Look is out now! Makkal Selvan Vijay Sethupathi Released the Poster

Lights On Media presents , filmmaker Ko. Dhanabalan directorial, Nishanth Rusho-Vivek Prasanna starrer “Parundhaaguthu Oorkuruvi ” First Look is revealed.

This movie is  based on the theme of  “Wickedness and Evil shall perish”. The movie, which is a survival thriller,  is made by a team of aspiring passionate youngsters. Makkal Selvan Vijay Sethupathi Released the Parundhaaguthu Oorkuruvi First Look Poster and Wished the young team all the success. With the first look appealing to the interests of audiences for its unique and fresh approach, the expectations and inquisitiveness upon Parundhaaguthu Oorkuruvi is significantly escalated.

The story centers around the two individuals, who are trapped inside a forest that has lots of mysteries. How they save each other and what are  the attempts made by them to survive the chain of hazardous situations in a single day is narrated and presented as a survival thriller.
A young team of powerhouse talents are creating this movie. Nishanth Rusho and Vivek Prasanna are playing the title characters in this movie. Mumbai based model Gayathri Iyer is playing the female lead role. Ratchasan Vinod Sagar, Arul D Shankar, Kodanki Vadivel, E Ramdoss and a few more actors are a part of this star-cast.

The crew has shot the movie across the remote forests located near Koodalur Manvayal village. This movie will offer a never-ever before experience to the audience in the theaters.
Ko. Dhanapal, a former co-director of filmmaker Ram has written the story and screenplay apart from directing this movie. Lights On Media, one of the leading Digital Marketing companies is stepping into the production of movies with this film. Suresh EAV, Sundara Krishna P, and Venki Chandrashekar are jointly producing this movie.

Technical crew:

Cinematography – Ashwin Noel
Editing – Nagooran Ramachandran (Don fame)
Music – Renjith Unni (Jimikki Kammal Fame)
Action – Om Prakash
Art – Vivek Selvaraj
Costumes – Karthik Kumar S & Shanmugha Priya
PRO – Sathish (AIM)

.

 

'Parundhaaguthu Oorkuruvi' First Look is out now! Makkal Selvan Vijay Sethupathi Released the Poster newsFeatured
Comments (0)
Add Comment