கோவை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதியில் காட்டிற்கு நடுவே கட்டப்பட்டுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் கதாநாயகன் அருள்நிதி, கதாநாயகி அவந்திகா மிஷ்ரா ஆகியோர் படிக்கிறார்கள். அந்தக் கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்த சூழ்லில் கல்லூரி விடுதியில் இருக்கும் மாணவிகள் சிலர் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். அவர்களின் மரணத்திற்கு காட்டில் உள்ள சிறுத்தைதான் காரணம் என்று கல்லூரி முதல்வர் தலைவாசல் விஜய், அவர்களது பெற்றோர்களிடம் சொல்லி, சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார். ஆனால், அந்த மரணங்களுக்கு சிறுத்தை காரணம் அல்ல என்பதை அருள்நிதி தன் காதலி மூலம் கண்டுபிடிக்கிறார். அப்படி என்றால் இந்த கொலைகளை செய்வது யார்? எதற்காக கொலைகள் நடக்கிறது? அந்த அந்த கொலையாளியை அருள்நிதி கண்டுபிடித்தாரா? என்பதுதான் ‘டி ப்ளாக்’ படத்தின் மீதிக்கதை.
அருள்நிதி கல்லூரி மாணவராக, தனக்கே உரிய பாணியில் வழக்கம்போல கதாபாத்திரத்துக்கு உண்டான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனக்கு கொடுத்த பணியை குறையே இல்லாமல் நிறைவு செய்திருக்கிறார் அருள்நிதி. கதாநாயகியாக நடித்திருக்கும் அவந்திகா மிஸ்ராவுக்கு தமிழில் இது இரண்டாவது படம். தன் கதாபாத்திரத்தை உணர்ந்து ஒரு அனுபவம் வாய்ந்த நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்.
ஆதித்யா கதிர், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, என அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.காளி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சரண்தீப் ஆக்ரோஷமாக மிரட்டியிருக்கிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கும் எரும சாணி விஜய், க்ரைம் த்ரில்லருக்கான கதையை வைத்துக்கொண்டு சுவாரஸ்யமாவும், ஒரு முழுமையான சஸ்பென்ஸ் நிறைந்ததாகவும் சிறப்பான முறையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். முழுக்க முழுக்க ஒரு கல்லூரியை மையமாக வைத்து ஒரு முழுமையான சஸ்பென்ஸ், த்ரில்லர், க்ரைம் என ஒரு சிறந்த படைப்பாக உருவாக்கி, இந்த திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.யூடியூப் சேனலிலில் தொடங்கி இயக்குநராக பரிணமித்திருக்கும் விஜய்குமாருக்கு இந்தப்படம் ஒரு நல்ல தொடக்கம் என்றாலும் படத்தில் வரும் சில காட்சிகளில் தடுமாறியிருக்கிறார்
அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் ரோன் எத்தன் யோஹனின் பாடல்கள் மற்றும் கெளசிக் கிரிஷின் பின்னணி இசை, கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு என தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பணியும் படத்திற்கு பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது..
மொத்தத்தில், ‘டி பிளாக்’ படம் மர்மம் நிறைந்த பார்க்க கூடிய படம்தான்.
ரேட்டிங் 3/5