‘மஹா வீர்யார்’ திரை விமர்சனம்!

சென்னை:

நடிகர் நிவின் பாலி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் “மஹாவீர்யார்” படத்தை Pauly Jr Pictures மற்றும்  Indian Movie Makers சார்பில் நிவின் பாலி, PS சம்னாஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், சுதிர் கரமனா, கிருஷ்ண பிரசாத், பத்மராஜ் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெளியநாட், ஷைலஜா P அம்பு  ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் அப்ரித் ஷைனி, விருது பெற்ற எழுத்தாளர் M முகுந்தனின் கதையை தழுவி  இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். ‘1983’ மற்றும் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அப்ரித் ஷைனியும், நிவின் பாலியும் இணைந்து  இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். ‘மஹாவீர்யார்’. மலையாள திரைப்படமான இப்படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியிருக்கிறது.

தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் வெளி வந்த “மகாதீரா” என்ற படம் சரித்திரம் கலந்த சமூக கதையாக மாறுபட்ட முறையில் வந்ததால் வெற்றி பெற்றது. அதுபோல ‘மஹாவீர்யார்’ படம் மன்னர் ஆட்சி காலத்தையும், தற்போது உள்ள  காலக்கட்டத்தையும் இணைத்து கற்பனையாக நகைச்சுவையுடன் இப்படத்தின் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள  சூழ்நிலையில் வழக்கமான திரைப்படமாக இல்லாமல்  முழுக்க முழுக்க மாறுபட்ட கதையம்சத்தோடு வித்தியாசமான சிந்தனையோடு உருவாகியிருக்கும் இப்படம் நகைச்சுவை  கலந்து நாட்டில் நடக்கும் பல அவலங்களை சொல்லி இருக்கிறார்கள்.

கேரள நாட்டின்  மன்னருக்கு வாயு தொல்லையால்  ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அதைத் தீர்த்து வைக்க அவரது அவையில் உள்ள  அமைச்சர் ஒருவர் குதிரையில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது ஒரு நாட்டில்,  ஒரு தெய்வீகமான சாமியார் ஒருவர் தன்னை அபூர்ணானந்த ஸ்வாமி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த ஊரில் உள்ள மக்களை ஆச்சரியப்பட வைக்கிகிறார். ஆனாலும் ஒரு மோசடி தொடர்பாக அபூர்ணானந்த ஸ்வாமியை காவல்துறையினர்  கைது செய்கின்றனர், அவரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு காவல்துறையினர் ஆஜர் செய்கின்றனர்.  நீதிமன்றத்தில் அந்த சாமியாரிடம் நீதிமன்ற கூண்டில் ஏற்றி நீதிபதி விசாரணை செய்யும்போது சில உண்மையான விஷயங்களை சாமியார் சொல்லுகிறார். இந்த சூழலில் அந்த மன்னரும், அமைச்சரும்  நீதிமன்றத்திற்கு வர, அவரையும் இதே நீதிமன்றம் விசாரிக்க, ஒரு கட்டத்தில் மன்னர் மற்றும் அமைச்சர் பிரச்சனையை தீர்த்து வைக்க சாமியாரான நிவின் பாலி ஒரு நீதிபதியிடம் ஒரு தீர்வு சொல்வதாக கூறுகிறார்.இந்த சூழ்நிலையில் மன்னரின் பிரச்சனையை அந்த நீதிமன்றம் தீர்த்து வைத்து நீதி வழங்கியதா? அந்த சாமியார் யார்?…என்ற  கேள்விகளுக்கு பதில்  சொல்லும் கதைதான் ‘மஹா வீர்யார்’ படம்.

சாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிவின் பாலி, நீதிமன்றத்தில் பேசும் காட்சிகளில், அவரது வசனங்கள் சிரிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில்  ஆசிப் அலியின்  நடிப்பு படத்தின் முக்கிய அம்சமாக சிறப்பாக இருக்கிறது. மன்னராக நடித்திருக்கும் லால், அமைச்சராக நடித்திருக்கும் ஆஷிப் அலி, நீதிபதியாக நடித்திருக்கும் சித்திக் ஆகியோர் நடிப்பு அனைவரும் ரசிக்கும்படி இருக்கிறது.

இப்படத்தில் கன்னட நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். தன் அழகான  நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.. நீதிமன்றத்தில் நிர்வாண கோலத்தில் பார்க்கும் போது அவர் மீது பரிதாபம் ஏற்படுகிறது.

சமூகம்-சரித்திரம் கலந்த கதையை மிக சுவாரஸ்யமாக கதை எழுதி இயக்கியதற்காக இயக்குனர் அப்ரித் ஷைனியை பாராட்டலாம்.

சந்துரு செல்வராஜின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளை மிக சிறப்பாக அமைத்து இருக்கிறார். பின்னணி இசையும் பாடல்களும் இந்த காலத்துக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது

மொத்தத்தில் ஒரு மாறுபட்ட முறையில் கதையமைத்து வெளி வந்திருக்கும் ‘மஹா வீர்யார்” அனைவரும் கண்டு களிக்கலாம்.

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.

"Mahaaveeryaar" Movie Review.Featured
Comments (0)
Add Comment