இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் பூஜையுடன் தொடக்கம்!

சென்னை:

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2′ படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டதால், ஒன்றும் செய்வதறியாமல் தவித்த லைகா நிறுவனம் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனால்  பல்வேறு காரணங்களால்’இந்தியன்-2’  படத்தின்  படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் இயக்குனர் சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர்.

இந்த சூழ்நிலையில்  சமீபத்தில் கமல் நடித்து வெளிவந்த ‘விக்ரம்’ பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், ‘இந்தியன்-2’  நிச்சயம் தொடங்கும்’ என தெரிவித்திருந்தார். இந்த படத்திற்க்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி விட்டதாக கூறப்பட்டது. இதனை காஜல் அகர்வால் மறுத்து, படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு மீண்டும் பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் பூஜையில்  இயக்குனர் சங்கர், மற்றும் டெக்னீஷியங்கள் கலந்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

"Indian-2" Movie NewsFeatured
Comments (0)
Add Comment