தனுஷ் நடிப்பில் தெலுங்கு/தமிழில் தயாராகி கொண்டிருக்கும் ‘சார்/ வாத்தி’ திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

சென்னை:

பிரபல தயாரிப்பாளரான  ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்’ சாய் சௌஜன்யாவுடன் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் நடித்துள்ளார். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் படத்தை வழங்குகின்றனர். வெங்கி அட்லுரி  எழுத்தாளர் மற்றும் இயக்குனராக பணியாற்றுகிறார். சம்யுக்தா மேனன்  முன்னணி கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் வெளியீட்டு நாளை இன்று அறிவித்திருந்தனர். மேலும்  டிசம்பர் 2ம் தேதி அன்று தெலுங்கு மற்றும் தமிழில் உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். அந்த அறிவிப்பு  புகைப்படத்தில், தனுஷ் ஒரு மேஜையில் அமர்ந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் தன் விரலை மேல் நோக்கி உயர்த்தி, படத்தின் வெளியீட்டு  நாளை காட்டுவது போல் இருந்தது. தனுஷின் பின்புறம் உள்ள கரும்பலகையில், பல்வேறு கணித சமன்பாடுகள் மற்றும் அவரது அருகில் ஒரு புத்தகமும் வைக்கப்பட்டிருந்தது. தனுஷ் தன்னுடைய சாதாரண தோற்றத்தில் மிக எளிமையாக காணப்பட்டார். தேதியை குறித்துக் கொள்ளுங்கள், வாத்தி வருகிறார் பாடம் எடுக்க, 2ம் டிசம்பர் 2022 முதல் என்பதனை படக்குழுவினர் அந்த போஸ்டரில் குறிப்பிட்டிருந்தனர்.

‘வாத்தி’  திரைப்படத்தின் படப்பிடிப்பானது முற்றிலும் முடிவடைந்து, தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த திரைப்படம். சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரகனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, ‘ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஜே யுவராஜ், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் GV பிரகாஷு டன் இணைந்து இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி படத்தின் தொகுப்பாளராகவும், அவிநாசி கொள்ளா படத்தின் ப்ரொடக்ஷன் டிசைனர் ஆகவும், வெங்கட் அவர்கள் இயக்கத்தில் சண்டைக்காட்சிகள் உருவாகி உள்ளது.

நடிகர் மற்றும் நடிகைகள்:

தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரகனி, தொட்டபள்ளி மது, நரா ஸ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சரா, ‘ஆடுகளம்’ நரேன், இளவரசு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி, பிரவீனா

தொழில்நுட்பக்குழு:

எழுத்து மற்றும் இயக்கம்          :   வெங்கி அட்லுரி
தயாரிப்பு                                      :  நாக வம்சி எஸ், சாய் சௌஜன்யா தொகுப்பாளர் நவீன் நூலி
ஒளிப்பதிவாளர்                          :  ஜே யுவராஜ்
இசை                                              :  ஜிவி பிரகாஷ் குமார்
தயாரிப்பு வடிவமைப்பாளர்     : அவிநாசி கொள்ளா சண்டை பயிற்சி வெங்கட்
பேனர்ஸ்                                         :  சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் போர் சினிமாஸ்
வழங்குபவர்                                 :  ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ்

மக்கள் தொடர்பு                          :  ரியாஸ் K அஹமத்

 

Dhanush’s Telugu-Tamil bilingual Sir/Vaathi set to hit theatres on December 2 newsFeatured
Comments (0)
Add Comment