பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்கும் புதிய படம் “வெங்கட் புதியவன்”

சென்னை:

பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்கும் படம் “வெங்கட் புதியவன்”. வி.என்.மூவிஸ் சார்பில் வெங்கடேஷ் இப்படத்தை  தயாரிக்கிறார்.

வெங்கட் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சில்பா நடிக்கிறார். இவர்களுடன் அழகு, மீசை ராஜேந்திரன், வெங்கல்ராவ், தசரதன், புருஸ்லீ ராஜீவ், ஏ.நிக்சன், கேப்டன் ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

அநியாயத்தை கண்டு பொங்கி எழும் காவல் அதிகாரியாக கதாநாயகன் வெங்கட் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இயக்குனர் ஸ்டண்ட் ஜெயந்த் பிரபல சண்டைப் பயிற்சியாளர் என்பதால், இந்தப் படத்தில் மிகப் பிரமாண்டமான முறையில், தத்ரூபமாக சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். கள்ளச்சாராயம் மற்றும் பெண்களை கடத்தும் பெரிய மனிதர்களை இந்தப் படம் தோலுரித்து காட்டுகிறது.

சண்டைப் பயிற்சி, எழுத்து, இயக்கம் ஸ்டண்ட் ஜெயந்த். ஒளிப்பதிவு பீட்டர், இசை விசால் தியாகராஜன், நடனம் சதீஷ், சூப்பர் பாபு, பாடல்கள் பருதிமான், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு வெங்கடேஷ்.

 

 

 

"VENKAT PUTHIYAVAN" MOVIE NEWSFeatured
Comments (0)
Add Comment