மலேசியா நாட்டில் கால்பதிக்கும் ‘ஆஹா’ தமிழ் ஓடிடி!

மலேசியா

மலேசியாவில் ஆஹா தமிழ் OTT தொடங்கப்படுவதற்கான அறிமுக விழா,  கோலாலம்பூர் பார்க் ரோயலில் விமரிசையாக நடந்தேறியது. இந்நிகழ்வினை மலேசிய மனிதவள அமைச்சர், டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் இந்திய ஆஹா குழுமத்தினர், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நம் நாட்டு மண்ணின் மை ந்தர்கள் பலர்கலந்துக்க கொண்டனர்.தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளடக்கங்களில், இரண்டு ஆண்டுகள் இந்தியசந்தையில் வெற்றிநடை போடுகின்ற ஆஹா OTT தளம், இம்முறை மலேசியாவில் பெரும் எதிர்பார்ப்பபோடு கால்பதிக்கின்றது.

இத்தளம் தொடங்கப்பட்டதிலிருந்து தரமான படைப்புகளை திறமையான பிரபலங்களின் மூலம் தந்துக்கொண்டிருக்கின்றது. 100 % தமிழ்படைப்புக்களை வழங்கிவரும் ஆஹா தமிழ் OTT , விக்ரம், விருமன், கூகுள் குட்டப்பா, மன்மதலீலை , அகாஷிவானி, அம்மூச்சி 2 , குத்துக்கு பத்து, எமோஜிமற்றும் சர்க்கார் வித் ஜீவா போன்ற வெற்றிப் படைப்புகளை உள்ளடக்கியது.

பிரபல நடிகர் சிம்பு மற்றும் முன்னணி இசை அமைப்பாளர் அனிருத் இருவரும் மலேசியாவில் கால்பதிக்கவிருக்கும் ஆஹா தமிழ் OTT தளத்திற்கு விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மே லும், மலேசியாவில் நடந்தேறிய அனிருத் லைவ்வின் மலேசியா 2022 கலை நிகழ்ச்சியின் OTT சேவை யை உடன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள் தமது உரையில்,

ஆஹா தளத்தின் அசாதாரண முயற்சியை பாராட்டியதோடு சுயபடைப்புகளை தயாரிப்பதின் மூலம் உள்ளூர் கலைஞர்கள், தயாரிப்பு நிறுவனங்களுக்கு உலகளவில் அங்கீகாரம் பெ றும் எனக்குறிப்பிட்டார். உள்ளூர் படைப்புகளில் முதலீடு செய்து, மலேசிய தமிழ் படைப்புகள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கும் முதல் இந்திய OTT தளமாக, ஆஹா தளம் விளங்கவிருக்கின்றது. இதன்மூலம், தெற்கிழக்காசியா வாடிக்கை யாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதே நமது நோக்கமாகும்.

ஆஹா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, திரு. அஜித் தாகூர் குறிப்பிடுகையில்,

ஆஹா தளத்தின் பலமாக இருப்பது, மே ற்கத்திய படைப்புக்களை மட்டும் சாராமல், 100 சதவதீம் உள்ளூர் படைப்புக்களை வெளியிடுவதேயாகும். இம்முயற்சியானது, வெறும் சிறந்த தமிழ் திரைப்படங்களை மட்டும் தராமல், உள்ளூர் கலைஞர்களையும் நிறுவனங்களையும் ஆதரிப்பதே யாகும். “யாதும் ஊரே யாவரும் கே ளிர்” கணியன் பூங்குன்றனார் வரிகளுக்கு சிறந்த உதாரணம், மலேசிய தமிழர்கள். அனைவரையும் அன்போடும் ஆதரவோடும் வரவேற்பதில் சிறந்தவர்கள். அதே வரவேற்பை ஆஹா தளத்திற்கு வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம். ஆஹா தமிழ் OTT தளம் மூலக்கூறாக, “தமிழால், தமிழில், தமிழருக்கு” எனும் கோட்பாட்டோடு தொடங்கப்பட்டது. அதே வேட்கையோடு மலேசியாவிலும் செயல்படும் எனஆஹா தமிழின் வணிக பிரிவு தலைவர், திரு.சிதம்பரம் நடேசன் அவர்கள் குறிப்பிட்டார்.

"Grand Launch of “Aha” Tamil OTT App for Malaysia was held today" newsFeatured
Comments (0)
Add Comment