இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழவேட்டரையர் பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்தும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களோடு கலந்துரையாடினார் நடிகர் சரத்குமார்.
இந்நிகழ்வில் சரத்குமார் கூறியதாவது…
பலராலும் பல காலம் முயற்சி செய்த பொன்னியின் செல்வனை, பல கஷ்டத்திற்கு பிறகு மணிரத்னமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து உருவாக்கியுள்ளனர். பல பெரிய நடிகர்களை ஒருங்கிணைத்து இந்த படத்தை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியுள்ளார்கள். முழு நாவலையும், கதாபாத்திரங்களையும் எடுக்க நினைத்தால் அது பல பாகங்களாக போகும். மணிரத்னம் அதை சரியாக சுருக்கி, ஒரு சிறப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார். பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் பெரிய வீரன், சோழ நாட்டிற்கு கட்டுபட்டவன், நந்தினியின் மனம் புரியாத கணவன் என்ற பல அம்சங்கள் நிறைந்து இருக்கிறது. இந்த படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்தற்கு நான் நன்றி கூறிகொள்கிறேன். மணிரத்னம் உடன் இணைந்தது பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன். வரலாற்றில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களில், இந்த படத்தில் நடித்த எங்களை இனிமேல் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
சோழர்கள் பற்றி தெரியாமல் இருந்தவர்களுக்கு கூட, இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர்களை பற்றி தெரியவரும். சோழர்களுடைய பெருமைகளும், திறமைகளும் பல மக்களுக்கு புரியவரும். இனிவரும் காலங்களில் சோழர்களை பற்றி தெரிந்து கொள்ளும் சூழலை இந்த திரைப்படம் ஏற்படுத்தும். இந்தியாவில் தாஜ்மகாலை பார்க்க வரும் மக்கள், இனி தஞ்சை பெரிய கோவிலையும் வந்து பார்க்க வேண்டும். இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த லைகா புரொடக்ஷனுக்கும், தயாரித்த மெட்ராஸ் டாக்கீஸ்க்கும் நன்றி.
பழுவேட்டரையர் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர். பொன்னியின் செல்வன் கதையை படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை எனக்கு அளித்த டைரக்டர் மணிரத்னத்துக்கு நன்றி. அந்த வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று தெரியாது. ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக கருதுகிறேன், அவர் நடித்திருந்தால் அந்த பாத்திரத்தை நன்றாகவே செய்திருப்பார். இப்போது நான் வில்லனாக நடிப்பது குறித்து கேட்கிறார்கள்
நாயகன், வில்லன், அப்பா, அண்ணன் இதெல்லாம் கதாபாத்திரங்கள் தான். அதில் சிறப்பாக நடிப்பவர்கள் தான் நல்ல நடிகராக இருக்க முடியும். தற்போது 21 படங்களுக்கு மேல் நடித்து வருகிறேன். நாயகனாகவும், முதன்மை கதாபாத்திரமாகவும், வில்லனாகவும் பல பாத்திரங்களில் நடித்து வருகிறேன். எப்போதும் போல் படத்திற்கும் எனக்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்.
*Supreme Star Sarath Kumar Press Meet*
Filmmaker Mani Ratnam, one of the most-celebrated filmmakers in Indian film industry, has created the epic ‘Ponniyin Selvan’ with an ensemble star-cast. With the movie all set for worldwide theatrical release on September 30, 2022, actor Sarath Kumar, who plays the role of Periya Pazhavettaraiyar, met and interacted with the press and media fraternity today.
Here are the excerpts from the event “Ponniyin Selvan has been the most desired film adaptation of many iconic filmmakers, producers and actors of Tamil film industry across the decades. However, facing so many challenges, both Mani Ratnam and Lyca Productions have visually translated this epic book for the big screens. If adapting the entire novel, it will run in many parts. Hence, Mani Ratnam has tweaked the epic book without missing major events and has created an excellent film output. Periya Pazhuvettaraiyar is the most important and powerful character in Ponniyin Selvan, where he has been protector of Chola Dynasty, and has been submissive towards them. At the same time, he has multiple dimensions of becoming a slave without his knowledge to Nandini’s evil plans. I thank Mani Ratnam sir for choosing me to play this character. It’s been a great delighting experience working with Mani Ratnam sir. I believe, all of us have performed up to his expectations in this movie. Hereafter, those reading Ponniyin Selvan novel will keep our image in their minds for the respective characters we have played.
Those unaware about Cholas will be enlightened watching this movie. Their feat of achievements and glorious contribution towards the humankind will be exhibited throughout this movie. In future, those who would like to know about the Chola Kingdom will be educated through this movie. Hereafter, the foreigners who visit Taj Mahal should start visiting the Thanjavur Brihadeeswarar Temple as well. I thank both Lyca Productions and Madras Talkies for their mammoth efforts in materializing this project.
Periya Pazhuvettaraiyar is a valorous man with 64 war scars on his body. While reading the Ponniyin Selvan book, I was excited to know who would be playing this role, and was glad that I got an opportunity to perform it. I am not sure who all aspired and desired to play this character. It is great to know that actor Rajinikanth also wanted to perform this character, and he would have nailed it perfectly with his performance. Many have been asking about me playing negative roles in the movies. According to me, protagonist, antagonist, father, brother – all are characters, which becomes 100% perfect with the dedication and contribution of actors. An actor will be regarded proficient, if he/she is able to deliver good performances in any given role. Currently, I am working in 21 movies that includes the hero, villain and strong characters as well. I request everyone to support me and my movies as you have been doing for years.”