V.R Combines விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சௌந்தர்யன் இசையில், “மஞ்சக்குருவி” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

சென்னை:

V.R Combines விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சௌந்தர்யன் இசையில், “மஞ்சக்குருவி” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர்கள் பேரரசு, ரவி மரியா, சண்முகசுந்தரம், ஹரிதாஸ் ரைட்டர் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். பத்திரிகையாளர் சங்க தலைவி கவிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஒரு ராஜாளி பறவையை ‘மஞ்சக்குருவி’யாக மாற்றுவதுதான் படத்தின் கதை. அண்ணன், தங்கை பாச போராட்டம் கதையின் உயிரோட்டம். கிஷோர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். வில்லனாக குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் நடித்துள்ளார். விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அரங்கன் சின்னதம்பி, இசை சௌந்தர்யன், ஒளிப்பதிவு ஆர்.வேல், எடிட்டிங் ராஜா முகமது, சண்டை மிரட்டல் செல்வா, கலை கே.எம்.நந்தகுமார், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு விமலா ராஜநாயகம்.

 

சூப்பர் ஹிட் பாடல்களுடன் படத்தை விரைவில் திரையில் பார்க்கலாம்!

 

"Manjakuruvi" Movie News.Featured
Comments (0)
Add Comment