சென்னையில் நடந்த அகில இந்திய சிட் ஃபண்ட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம்!

சென்னை:

அகில இந்திய சிட் ஃபண்ட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று (30/09/2022) சென்னையில் நடந்துள்ளது. புதிய நிர்வாகக்குழு தற்போது தேர்தல் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதவியேற்கும் பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் மற்ற உறுப்பினர்களின் நியமனம் குறித்தான பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

1.   திரு. V.C. பிரவீன் – தலைவர் (ஸ்ரீ கோகுலம் ஃபினான்ஸ் & சிட் கம்பெனி ப்ரைவேட் லிமிடட்)

2.   திரு. T.S. சிவராமகிருஷ்ணன் – (முன்பு உடனடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் சேர்மன் – ஆலோசனைக் குழு) (தி பாலுசெரி பெனிஃபிட் சிட் ஃபண்ட் ப்ரைவேட் லிமிடட்)

3.   திரு. A. சிற்றரசு – பொதுச் செயலாளர் (குறிஞ்சி சிட் ஃபண்ட்ஸ் ப்ரைவேட் லிமிடட்)

4.   திரு. கமல் பாம்பானி- அமைப்பு செயலாளர் (சந்திரலக்‌ஷ்மி சிட் ஃபண்ட்ஸ் ப்ரைவேட் லிமிடட்)

5.   திரு. A.P. அருணாச்சலம்- பொருளாளர் (தி மாயாவரம் ஃபினான்ஷியல் சிட் கார்ப்பரேஷன் லிமிடட்)

தற்போது, புதிதாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. பிரவீன், சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை பலப்படுத்தப்படும் என்றும், சிட் ஃபண்ட் துறையின் சிறந்த வளர்ச்சியை உறுதி செய்வதற்கான உத்தி வகுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது, சிட் ஃபண்ட் என்பது சேமிப்பையும் கடன் வாங்குவதையும் ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான நிதிக் கருவியாக செயல்படுகிறது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பயன்பெறவும் வளரவும் இது உதவுகிறது.

சிட் ஃபண்ட் துறையின் வளர்ச்சி நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது. வங்கிகளைத் தவிர்த்து நடுத்தர வர்க்க மக்களின் நிதி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், சிறு வணிகங்கள், சுயதொழில் முனைவோர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் என பலருக்கும் சிட் ஃப்ண்ட் நிறுவனங்கள் நீண்ட காலமாக உதவி வருகின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1982ல் இயற்றப்பட்ட ஒரு சிட் ஃபண்ட் சட்டத்தில் தற்போதைய கால நடைமுறைகளுக்கு ஏற்றபடி சில திருத்தங்கள் அதில் கொண்டு வர வேண்டும். சட்டத்தில் இப்படி தேவையான திருத்தங்களைக் கொண்டு வர கடுமையான முயற்சிகளை நிச்சயம் சங்கம் மேற்கொள்ளும்.

சிட் ஃபண்ட் சேவைகளுக்காக விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொழில்துறையின் வளர்ச்சியை கணிசமாக பாதிக்கும். வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனம் மற்றும் குறு நிதி நிறுவனங்கள் போன்ற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் நிதி சேவைகள் ஜிஎஸ்டி-யின் வரிச்சேவைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் சிட் ஃபண்ட்கள் வழங்கும் நிதி சேவைகள் 18% வரிக்கு உட்பட்டது. இந்த ஒழுங்கின்மை நிச்சயம் சரி செய்யப்பட வேண்டும். சிட் ஃபண்ட் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சங்கம் தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் தலைவர் பிரவீன் கூறியுள்ளார்.

 

 

 

All India Association of Chit Funds NewsFeatured
Comments (0)
Add Comment