இணையதளத்தில் 11 லட்சம் பார்வையாளர்களை கடந்து பலரது பாராட்டை பெற்ற, விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் ‘பவுடர்’

சென்னை:

இயக்குநர் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், வித்யாபிரதீப், சிங்கம் புலி, வையாபுரி நடிக்கும் ‘பவுடர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு அக்டோபர் 1 அன்று சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் K. பாக்யராஜ், வசந்த், பார்த்திபன் ,எழில், சசி , எஸ் ஆர் பிரபாகரன், வா கௌதமன், அறிவழகன், பிரபு சாலமன், விஜய் பாலாஜி மற்றும் ஜாகுவார் தங்கம், நக்கீரன் கோபால், ஆடிட்டர் அக்பர், கவிஞர் சினேகன், எழுத்தாளர் அஜயன் பாலா, முன்னணி தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி, சிவி குமார், அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா, கதிரேசன், சமீர் மற்றும் தமிழ் திரையுலக முன்னணி நடிகர்கள் ராதாரவி, சில்வர் ஜூப்ளி ஸ்டார் மோகன், நாசர், உதயா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வாழ்த்தி சிறப்பித்த ‘பவுடர்’ ஆடியோ வெளியிட்டு விழாவில் வெளியான ட்ரெய்லர் இணையதளத்தில் 11 லட்சம் பார்வையாளர்களை கடந்து பலரது பாராட்டை பெற்று வருகிறது.

விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘பவுடர்’ முதல் பாகத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ விஜய் மற்றும் இணை தயாரிப்பாளர் கோவை எஸ் பி மோகன்ராஜ் தெரிவித்தனர்.

 

 

"POWDAR" MOVIE NEWSFeatured
Comments (0)
Add Comment