‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். ஜஸ்டின் பிரபாகரன் – கரோலின் சூசன்னா திருமணம் மதுரையில் உள்ள CSI – Holy Immanuel சர்ச்சில் நேற்று காலை 9.30 மணிக்கு சொந்தங்களும் நண்பர்களும் சூழ நடைபெற்றது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரை எல்லீஸ் நகரில் உள்ள MRC மஹாலில் காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, ஷாந்தனு பாக்யராஜ், கலையரசன், காளி வெங்கட், பால சரவணன், ஆதித்யா கதிர், இயக்குனர்கள் பா.ரஞ்சித், விக்ரம் சுகுமாரன், நாகராஜ், மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன், அதியன் ஆதிரை, ப்ராங்கிளின் ஜேக்கப், ஷான், பரத் கம்மா, விவேக் சோனி, தயாரிப்பாளர் S.R.பிரபு,பின்னனி பாடகர் கிருஷ், அந்தோணிதாசன் பாடலாசிரியர் மதன் கார்க்கி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.