Actress Rashmika Mandanna reveals the first look of supernatural thriller ‘Yamakaathaghi’

CHENNAI:

Yamakaathaghi, a supernatural thriller produced by actor Venkat Rahul, cinematographer Sujith Sarang, and Editor Sreejith Sarang of Naisat Media Works & Sarang Brothers Productions and directed by Peppin George Jayaseelan  has completed its shooting and the postproduction work is proceeding at brisk pace. The film’s first look revealed by actress Rashmika Mandanna has gained excellent response. Actor Venkat Rahul, cinematographer Sujith Sarang, and Editor Sreejith Sarang, who have always been inclined with passion towards art of cinema together have produced this movie. The insatiable passion for good cinema and the desire to create good contents have been the common factors that drew them together as friends.

During a meet with director Peppin George Jayaseelan, these friends were engrossed with the narration of script and decided to produce the movie out of own interest. They have produced this movie with the utmost thirst for delivering a good quality cinema for the film lovers.This film comprising newcomers in the star cast has been made without any compromises in the creative process, with complete emphasis on the story. The film will take audiences to a next level of experience with its top-notch quality.

Yamakaathaghi featuring a female character as the titular role is essayed by Roopa Koduvayur. Narendra Prasath, Geetha Kailasam, R. Raju, Subash Ramasamy, Haritha, Porkodi, Jai, Pradeep, Ramasamy and many others are a part of this star cast. The entire shooting of Yamakaathaghi has been filmed across villages around Tanjore. The film will be a supernatural mystery thriller set against the rural backdrops.

With the post production work happening in full swing, the official announcement pertaining to the film’s teaser, trailer, audio and worldwide theatrical release will be made soon. The film is produced by Naisat Media Works & Sarang Brothers Productions and is directed by Peppin George Jayaseelan.

Technical Crew

DOP – Sujith Sarang
Editor & Colorist – Sreejith Sarang
Music – Jecin George
Art – Joseph Bobbin
Sound Design – Sync cinema
Sound Mixing – Aravind Menon
VFX – Paper Plane VFX
Stunt – Murali G
PRO – Sathish (AIM)
Publicity Design – Sivakumar (Siva Digital Art)

கிராமத்து பின்னணியில் சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர்எமகாதகிவிரைவில் திரையில் !!

நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில்  இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திரைத்துறையில் தொழில்நுட்ப கலைஞர்களாக,  கலையை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம் வரும் நண்பர்கள் நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர்களை கலையும் சினிமா மீதான காதலும் நண்பர்களாக இணைத்துள்ளது.

ஒரு சந்திப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ்  ஜெயசீலன் கதையினை கேட்ட நண்பர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே, இப்படத்தை தாங்களே இணைந்து தயாரிக்க முன்வந்துள்ளனர். சினிமா மீதான உன்னத காதலில், ஒரு தரமான படத்தை தரும் எண்ணத்தில், இப்படத்தை தயாரித்துள்ளனர்.

புதுமுகங்களால் உருவாகும் இப்படம் எந்தவித சமரசமுமின்றி முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகனை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் தரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு பெண் முதன்மை நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், R.ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் நடக்கும்,  சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

நைசாட் மீடியா ஒர்க்ஸ் & சாரங் பிரதர்ஸ் புரடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்

தயாரிப்பாளர்கள் வெங்கட்ராகுல், சுஜித்சாரங் ஸ்ரீஜித்சாரங்
இயக்கம்-  பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்

தொழில் நுட்ப  குழுவினர்

ஒளிப்பதிவு –  சுஜித் சாரங்
எடிட்டர் & கலரிஸ்ட் – ஸ்ரீஜித் சாரங்
இசை – ஜெசின் ஜார்ஜ்
கலை – ஜோசப் பாபின்
சவுண்ட் டிசைன் –  Sync Cinema
சவுண்ட் மிக்ஸிங் – அரவிந்த் மேனன்
VFX. Paperplanevfx
ஸ்டண்ட் – முரளி G
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
விளம்பர வடிவமைப்பு – சிவகுமார் (Sivadigitalart)

 

Actress Rashmika Mandanna reveals the first look of supernatural thriller ‘Yamakaathaghi’ NEWSFeatured
Comments (0)
Add Comment