உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த தெனாலி மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற கூகுள் குட்டப்பா ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம். குடும்பப்பங்கான, உணர்வு பூர்வமான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்கும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சித்தாரா, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரா, மைம் கோபி மற்றும் அனுபமா குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ராம்சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தின் படத்தொகுப்பை ஜான் மேற்கொள்ள, கலை வடிவமைப்பை அருண் கவனிக்கிறார்.
விஜய் கனிஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு விஜய் கனிஷ்கா சித்தாரா ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.இந்தப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக, காமெடி ஆக்சன் கமர்ஷியல் என அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகிறது.
‘Hit List’ shooting commences on hero Vijay Kanishka’s birthday!
‘Hit List’ becomes the third film under Director KS Ravikumar’s banner – RK Celluloids after ‘Ulaga Nayagan’s’ Tenali and Koogle Kuttappa, both being well received by the audience.
Director Vikraman, widely known for connecting emotionally with the family audience, is now introducing his son Vijay Kanishka as a hero through this film.
This film is jointly directed by debut directors Sooryakathir and Karthikeyan who had formerly assisted Director KS Ravikumar. Actor Sarath Kumar plays a pivotal role in the film.
The film’s starcast include KS Ravikumar, Sithara, Munishkanth, Redin Kingsley, Abinaya, ‘KGF fame’ Garuda Ramachandra, Mime Gopi and Anupama Kumar.
The film’s Cinematography is being held by Ram Charan, Editing by John and Art Direction by Arun.On the occasion of the film’s hero Vijay Kanishka’s birthday, yesterday, the filming commenced where the team had shot scenes of Vijay and Sithara together. This film is expected to reach out and connect with all sorts of audiences since it has comedy, action and commercial aspects in it.
—