சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியீடு!

CHENNAI:

‘நம்பிக்கை நட்சத்திரம்’ சந்தீப் கிஷன், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரம்மாண்ட முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி, கரண் சி புரொடக்‌ஷன்ஸ் எல்எல்பி நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்திய படைப்பாக தயாரித்து வரும் திரைப்படம் ‘மைக்கேல்’. இதில் நடிகர் சந்தீப் கிஷன், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பரத் சௌத்ரி மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இதனை மறைந்த ஸ்ரீ நாராயண்தாஸ் கே நரங் வழங்குகிறார்.

:மைக்கேல்’ படத்தின் தமிழ் பதிப்பின் டீசரை நடிகர் தனுசும், தெலுங்கு பதிப்பின் டீசரை நடிகர் நானியும், மலையாள பதிப்பின் டீசரை நடிகர் துல்கர் சல்மானும், கன்னட பதிப்பின் டீசரை நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டனர். இந்தி பதிப்பின் டீசரை நடிகர் ராஜ்குமார் ராவ், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜான்வி கபூர், இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். டீசரில் படத்தின் முக்கியமான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. மேலும் இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும், கௌதம் வாசுதேவ் மேனனின் வில்லத்தனம் கலந்த காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. இதன் கதை எண்பதுகளில் தொடங்குவது போன்று அமைக்கப்பட்டிருப்பதால், நடிகர்களின் கெட்டப்புகள் மற்றும் அரங்கங்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது.

‘மைக்கேல்’ படத்தின் டீசரில், ‘‘மைக்கேல்! வேட்டையாட தெரியாத மிருகத்த மத்த மிருகங்கள் வேட்டையாடிடும் மைக்கேல் ” என்ற வசனத்திற்கு,, “ துரத்துற பசியிலிருக்குற மிருகத்துக்கு வேட்டை தெரியனும்னு அவசியமில்ல மாஸ்டர் ” என நாயகன் பதிலளிக்கும் வசனங்களும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகிய மூவரின் முரட்டுத்தனமான அவதாரங்களிலிருந்து ஆக்சன், அழுத்தமான உரையாடல்கள், ரம்மியமான காதல் காட்சி… ஆகியவை இடம்பெற்று, டீசரை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. மேலும் ‘மைக்கேல்’ திரைப்படம் ஒரு காவிய கதை களத்துடன் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களின் தொகுப்பாகவும் இருக்கிறது. இந்தப் படத்தின் டீசரில் ஒரு குழந்தையின் கால்கள், அதன் உருவப்படம் மற்றும் ஒரு தெய்வம் போன்ற சில மர்மமான விசயங்களை காட்சிப்படுத்தியிருக்கிறது. சந்தீப் கிஷன் தன்னுடைய கட்டுடலை காட்டி ஆக்சன் அதிரடி நாயகன் என்ற தோற்றத்தை வெளிப்படுத்தி அதகளப்படுத்துகிறார்.

படத்தின் காதல் காட்சிகளும், ஆக்சன் காட்சிகளைப் போல் சுவராசியமாக இருக்கிறது. இந்த டீசரில் சந்தீப் கிஷன் மற்றும் நடிகை திவ்யான்ஷா கௌஷிக் இடையேயான உதட்டுடன் உதடு பொருத்திய முத்தக் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. ‘மக்கள் செல்வன்: விஜய் சேதுபதியின் மிரட்டலான தோற்றம், கௌதம் வாசுதேவ் மேனனின் அசுரத்தனமான தோற்றம் ஆகியவையும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், அனசுயா பரத்வாஜ், நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோரும் இடம் பெற்றிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மூலம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். கிரண் கௌஷிக்கின் ஒளிப்பதிவும், சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையும் டீசரை மீண்டும் மீண்டும் காணத் தூண்டுகிறது. இந்தப் படத்திற்கான வசனங்களை திரிபுராநேனி கல்யாண் சக்கரவர்த்தி, ராஜன் ராதாமணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி ஆகியோர் எழுதியுள்ளனர். ‘மைக்கேல்’ படத்தின் டீசர், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

நடிகர்கள்:

சந்தீப் கிஷன்
விஜய் சேதுபதி
கௌதம் வாசுதேவ் மேனன்
வருண் சந்தேஷ்
திவ்யான்ஷா கௌஷிக்
வரலட்சுமி சரத்குமார்
அனசுயா பரத்வாஜ்
மற்றும் பலர்

தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல்

இயக்குநர் : ரஞ்சித் ஜெயக்கொடி
தயாரிப்பாளர்கள் : பரத் சவுத்ரி & புஸ்கூர் ராம் மோகன் ராவ்.
வழங்குபவர் : ஸ்ரீ நாராயணன் தாஸ் கே நரங் ( மறைவு)
தயாரிப்பு நிறுவனம் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி & கரண் சி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி
இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்.
ஒளிப்பதிவு : கிரண் கௌஷிக்
வசனம் : திரிபுராநேனி கல்யாண் சக்கரவர்த்தி, ராஜன் ராதா மணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி
நிர்வாகத் தயாரிப்பு : கே. சாம்பசிவராவ்
மக்கள் தொடர்பு :யுவராஜ்

Sundeep Kishan, Vijay Sethupathi, Ranjit Jeyakodi, Sree Venkateswara Cinemas LLP, Karan C Productions LLP’s Pan India Film Michael Teaser Unveiled

Promising star Sundeep Kishan is here to take audiences on an adrenaline trip with filmmaker Ranjit Jeykodi’s upcoming film ‘Michael’ which marks the maiden Pan India film of the actor. The most happening Production House Sree Venkateswara Cinemas LLP, in association with Karan C Productions LLP is mounting the movie on a massive scale. Michael is a joint production venture of ace distributor Bharath Chowdary and Puskur Ram Mohan Rao. Late. Shri Narayan Das K Narang is the presenter.

Yesterday, Nani released the film’s Telugu teaser, while Dhanush launched the Tamil version, Dulquer Salmaan unveiled the Malayalam version, and Rakshit Shetty did the honors of unveiling the Kannada teaser. The Hindi teaser was released by Raj Kumar Rao, Rakul Preet Singh, Jhanvi Kapoor, Raj & DK. The teaser digs into revealing important glimpses of Michael. Also, it gives an insight into Vijay Sethupathi’s character as well as Gautham Menon’s villainous streak. More importantly, the story dates back to the 80s, going by the get-ups of the actors, and the set-ups in the background.

The teaser begins with intruding the three prominent faces of the movie, and the master says, “Michael, animals that can’t hunt, get caught by predators,” and pat comes the reply from Michael, who says, “There is no need to wander outside to placate starvation, Master.” From rugged dashing avatars of Sundeep Kishan, Vijay Sethupathi, and Gautham Menon, to spectacular action episodes, to intense dialogues to steamy romance, the teaser looks promising and the film seems to be a complete entertainment package with an epic storyline.

The teaser also shows some mysterious elements like the legs of a kid, its portrait, and a godman. Sundeep Kishan shows off his wild side, as the action sequences are designed in a jaw-dropping manner. Transformed himself into a beast mode, Sundeep Kishan flaunted his chiselled physique and looked dashing in the video. The romantic track is as intriguing as the action part, and the teaser also shows a lip-lock sequence between Sundeep Kishan and Divyansha Kaushik. Vijay Sethupathi terrifies with his menacing look and power-packed screen presence. Gautham Menon appeared like a monster. The teaser also shows glimpses of actors Varalaxmi Sarathkumar, Varun Sandesh, and Anasuya Bharadwaj.

Ranjit Jeyakodi transports us to a different world with his unique way of storytelling. Kiran Kaushik’s breathtaking visuals and the exhilarating background score of Sam CS make the narrative extra engaging. The production design of Karan C Productions LLP, and Sree Venkateswara Cinemas LLP is top-notch. The dialogues for the movie were penned by Tripuraneni Kalyan Chakravarthy, Rajan Radhamanalan, and Ranjit Jeyakodi. It is clearly visible that the teaser has brought enormous reasons for the audience to wait keenly to watch the movie in cinemas.The film will be released in Telugu, Tamil, Kannada, Malayalam and Hindi languages.

Cast: Sundeep Kishan, Vijay Sethupathi, Gautham Menon, Divyansha Kaushik, Varalaxmi Sarathkumar, Varun Sandesh, Anasuya Bharadwaj, and others.

Technical Crew:

Director: Ranjit Jeyakodi
Producers:  Bharath Chowdary and Puskur Ram Mohan Rao
Presenter: Late. Shri Narayan Das K Narang
Banners: Sree Venkateswara Cinemas LLP, Karan C Productions LLP
Music Director: Sam CS
DOP: Kiran Kaushik
Dialogues: Tripuraneni Kalyan Chakravarthy, Rajan Radhamanalan, and Ranjit Jeyakodi
Executive producer: K. Sambasivarao
PRO: Yuvraaj

 

 

FeaturedKaran C Productions LLP’s Pan India Film 'Michael' Teaser Unveiled
Comments (0)
Add Comment