இளம் நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஹனு-மேன்’ படத்தில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.’ஜோம்பி ரெட்டி’ எனும் திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், திறமையான இளம் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் ‘ஹனு-மேன்’ எனும் பான் இந்திய அளவிலான சூப்பர் ஹீரோ திரைப்படம் தயாராகியிருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா அண்மையில் வெளியிட்ட ‘ஹனு-மேன்’ படத்தின் காட்சி துணுக்குகளில் நாயகன் தேஜா சஜ்ஜாவின் கதாபாத்திரத்தை பிரத்யேக பார்வை மூலம் அறிமுகப் படுத்தியிருந்தார். இதற்கு பார்வையாளர் களிடத்தில் பெரும் தாக்கத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசர், பார்வையாளர்கள் தங்களின் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திராத வகையில் அமைந்திருக்கிறது.
நீர்வீழ்ச்சியின் மாறுபட்ட கோணத்தில் தொடங்கும் டீசரின் பின்னணியில், ஹனுமான் என்ற புராண கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் ‘ராம்’ எனும் மந்திரம் ஒலிக்கிறது. இதனைத் தொடர்ந்து ஹனுமான் எனும் அவதாரத்தின் தோற்றப் பின்னணி குறித்த சமஸ்கிருத ஸ்லோகம் ஒலிக்க.. ‘பண்டையோர்கள் மீண்டும் எழுவார்கள்’ என்ற மேற்கோள் வாசகம் இடம்பெறுகிறது. பிறகு கடற்கரையில் அலைகளால் தழுவப்படும் நிலையில் கதாநாயகனின் கம்பீரமான அறிமுகம் காண்பிக்கப்படுகிறது. உடன் பயந்த சுபாவத்துடன் கூடிய கதாநாயகி அமிர்தா ஐயரின் அறிமுகமும் காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வித்தியாசமான வேடத்தில் வில்லனாக வினய் ராயும், சூரிய கிரகணமும், நாயகன் தேஜா சஜ்ஜாவின் ஆக்ரோஷமான அவதாரமும், வரலட்சுமி சரத்குமாரின் வீராவேசமான சண்டைக் காட்சிகளும், நாயகனின் பிரமிக்கத்தக்க வகையிலான ஆக்சன் காட்சிகளும் இடம்பெற்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இதைத்தொடர்ந்து நாயகன் தேஜா சஜ்ஜாவின் வித்தியாசமான ஆக்சன் காட்சிகளும் இடம் பெறுவது ரசிகர்களை பரவசமூட்டுகிறது. அதன் பிறகு நாயகன் சூப்பர் ஹீரோவாக மாறி, ஒரு குகையினுள் உள்ள பனி லிங்கத்தின் ஊடாக கடுந்தவம் இருக்கும் காட்சியை காண்பித்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்கள். வி எஃப் எக்ஸ் பணிகளும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தின் தரத்தை உயர்த்தி உள்ளது.
சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ நாகேந்திர தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி அற்புதமான மாய உலகத்தை உருவாக்கி இருக்கிறார். தேஜா சஜ்ஜா, சூப்பர் ஹீரோவாக மாற்றம் பெற்று தோன்றுவது ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது. அவரது தோற்றம், உடல் மொழி, செயல்பாடு.. என அனைத்தும் ரசிகர்களை பெரிதாக ஈர்த்திருக்கிறது. நாயகி அமிர்தா ஐயர் தேவதை போல் தோன்றுகிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக், ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இத்தகைய பிரம்மாண்டமான படைப்பை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இதனை திருமதி சைதன்யா வழங்குகிறார்.
ஹனு-மேன் படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prasanth Varma’s Pan India Movie HANU-MAN Teaser Unleashed
Creative director Prasanth Varma who made the first Telugu zombie film Zombie Reddy creates Prasanth Varma Cinematic Universe to make original Indian superhero movies and HANU-MAN starring talented young hero Teja Sajja is the first film from the multiverse.Prasanth Varma previously introduced Teja Sajja’s character through a glimpse which created a huge impact among cine-goers. Later he introduced other lead characters through posters. Today, he came up with something unimaginable. The crazy Pan India film’s teaser has been unveiled today.The teaser begins with showcasing a waterfall and a massive HANUMAN statue in a standing posture with a mace in his hand can be seen. In the background, we can hear the chanting of Ram to give a devotional ecstasy in the end.
A light in the hill with some creatures doing the act of circumambulation (Pradakshina) gives us the sign of the arrival of the ‘Supreme Being’. The quote- The Ancients Shall Arise Again, states the same.Teja Sajja makes an entry as an underdog who lies unconscious on the shore of the sea. The fearful face of Amritha Aiyer, followed by the solar eclipse indicates the advent of evil. Vinay Rai is the ‘Man Of Doom’ and he is petrifying. Varalaxmi Sarathkumar makes an entry as a bride who bashes baddies with a coconut palm.
The transformation of Hanumanthu from an underdog to a superhero is a sight to behold. Holding a mace, standing tall on the hill with a helicopter approaching him, and finally showing his superpowers by flying in the sky, it looks as if he’s possessed by Lord Hanuman. The last visuals of Lord Hanuma performing Tapas and chanting Ram will blow our minds.The masterwork of Prasanth Varma and his team can be ostensible in every frame and we are transported to the astonishing world of Anjanadri through this 121-second visual extravaganza.
Shivendra makes us glued to the screen with his amazing camerawork, wherein the music director Gowrahari makes us fall into a trance with his incredible background score. Production designer Srinagendhra Tangala created a fantastic fantasy world. The production values of Primeshow Entertainment are wondrous. The VFX work is of top-notch quality and has elevated the scenes to a new level. Teja Sajja is a champ in the making and he looks very much convincing as the superhero. From his get-up to his body language to his action, everything is just spectacular. Amritha Aiyer looks like an angel. Others played their parts efficiently.
The teaser has set sky-high expectations on the movie and we can’t hold our excitement to watch the movie on big screens.The film is produced prestigiously on a grand scale by K Niranjan Reddy, while Smt Chaitanya presents it. Asrin Reddy is the executive producer, Venkat Kumar Jetty is the Line Producer and Kushal Reddy is the associate producer.
HANU-MAN is presently in post-production stages and the makers will soon announce the release date.
Cast: Teja Sajja, Amritha Aiyer, Varalaxmi Sarathkumar, Vinay Rai, Getup Srinu, Satya, Raj Deepak Shetty and others
Technical Crew:
Writer & Director: Prasanth Varma
Producer: K Niranjan Reddy
Banner: Primeshow Entertainment
Presents: Smt Chaitanya
Screenplay: Scriptsville
DOP: Dasaradhi Shivendra
Music Directors: Gowrahari, Anudeep Dev and Krishna Saurabh
Editor: SB Raju Talari
Executive Producer: Asrin Reddy
Line Producer: Venkat Kumar Jetty
Associate Producer: Kushal Reddy
Production Designer: Srinagendhra Tangala
PRO: Yuvraaj
Costume Designer: Lanka Santhoshi