ஓர் இணையதள செய்தி ஊடகத்தில் துணிச்சல் நிறைந்த பத்திரிகையாளராக பணிபுரியும் திரிஷாவைக் கண்டு, அவரது குடும்பம் பயந்து ஒதுங்கி இருக்கிறனர். இந்த சூழ்நிலையில் 16 வயது நிரம்பிய திரிஷாவின் அண்ணன் மகள் குறித்து முகநூல் மூலம் ஆபாசமான வீடியோ ஒன்று வருகிறது. இதனால் அந்த குடும்பத்தில் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்த அவர், திரிஷாவிடம் நடந்த விஷயத்தைக் கூறுகிறார். இதனை திரிஷா விசாரிக்க ஆரம்பிக்கும்போது பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படுகிறது. அதை திரிஷா சரிசெய்ய முயலும்போது, அது உலக அளவிலான இன்னொரு பெரும் சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது. அந்த சிக்கல்களை த்ரிஷா எப்படி எதிர்கொள்கிறார்? கடைசியில் எல்லா பிரச்னைகளிலிருந்து மீண்டு வந்தாரா? என்பதைச் சொல்லியிருக்கும் படம் தான் “ராங்கி”
‘தையல் நாயகி’ என்ற கதாபாத்திரத்தில் பத்திரிகை நிருபராக நடித்திருக்கும் திரிஷா, மேக்கப் இல்லாமல் இயல்பாக தோன்றினாலும் அழகு தேவதையாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடை உடை பாவனைகளில் துணிச்சல், உடல்மொழியில் ஓர் இனம் புரியாத அலட்சியம், காவல்துறையுடன் மோதும் காட்சிகள் அனைத்தும் த்ரிஷாவுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் இருக்கிறன. தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அதை உள் வாங்கி நடிக்குபோது அழகால் ஜொலிக்கிறார். அனைத்து ரசிகர்களையும் கிரங்கடிக்கும் திரிஷா, இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அந்த காலத்து விஜயசாந்தி போல மிரள வைக்கிறார். யாருக்கும் பயமில்லாமல் அடங்க மறுக்கும் அழுத்தமான கதாபாத்திரத்தில் முழுமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
அண்ணன் மகளாக வரும் அனஸ்வரா அப்பாவித்தனமான அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அவரது நடிப்பில் தனது பணியை செவ்வனே சிறப்பாக செய்துள்ளார்,.
காவல்துறை அதிகாரியாக வரும் ஜான்மகேந்திரன் தன் கேரக்டரை சிறப்பாக செய்து அனைவரையும் கவர்கிறார்.
இப்படத்தில் மிகமுக்கியமான ஆலிம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உஸ்பெகிஸ்தான் நடிகர் மிக சிறப்பாக நடித்து அசத்தி இருக்கிறார். ஆலிம் குழுவில் இருக்கும் முன்னணிவீரர் கூறும், நாம் ஜெயித்தால்தான் போராளி இல்லையெனில் தீவிரவாதி என்கிற வசனம் முக்கியமாக எல்லோரையும் கவர்ந்துள்ளது.
சக்திவேலின் ஒளிப்பதிவில் உஸ்பெகிஸ்தான் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. உஸ்பெகிஸ்தானின் மலைகள் சூழ்ந்த பகுதிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் ஆச்சரியப்படும் விதத்தில் மிக உன்னதமாக படமாக்கியிருக்கிறார்.
சி.சத்யாவின் இசையில் கபிலன் எழுதியுள்ள ‘பனித்துளி’ பாடல் வரிகள் அழுத்தமானவை. கைகூடாத காதலின் வலிகளை வரிகளில் வெளிப்படுத்தி யிருக்கிறார் கபிலன். அந்த பாடல் அனைவரும் கேட்கும் ரகம்தான். அந்த பாடல் எழுதிய கபிலனுக்கு பாராட்டுக்கள்!
இயக்குநர் சரவணன் சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களைப்பற்றி சுட்டிக் காட்டி படத்தில் பதிவு செய்து இருந்தாலும், பத்திரிகையாளர்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும்? என்று த்ரிஷாவை வைத்துப் பாடம் எடுத்திருக்கிறார். தீவிரமாக நியாயம் பேசுகிறவன் தீவிரவாதி, தன் உரிமையையும் தாழ்மையுடன் கேட்பதா? உள்ளிட்ட பல வசனங்களில் இயக்குநரின் சமுதாயக் கோபம் வெளிப்பட்டிருக்கிறது. நாட்டில் நடக்கும் குற்ற செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும், என்று சொல்லியிருக்கும் இயக்குநர் சரவணன், தன் வசனங்கள் மூலம் சமூக குறைகளை சுட்டிக்காட்டிய விதம் சிறப்பு..சென்சாரில் ஏராள காட்சிகளை வெட்டி இருந்தாலும், அதையும் மீறி தான் எண்ணியதைப் பார்வையாளர்களுக்குக் காட்டி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சரவணன்.
மொத்தத்தில், ‘ராங்கி’ படத்தை அனைத்து ரசிகர்களும் கண்டு களிக்கலாம்
.ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.