பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது சந்தானத்தின் காமெடி திரைப்படம் “கிக்”

சென்னை:

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிக்’. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா  மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிரமானந்தம்,மன்சூர் அலிகான், YG மகேந்திரன் சாது கோகிலா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் செய்த காமெடி கலாட்டா YouTube-ல் பெரும் வைரலாகி வருகிறது.

ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ‘கிக்’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதை சந்தானம் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

நேற்று இதன் வீடியோ மேக்கிங் வெளியானது. நடிகர் சந்தானம் நடிப்பில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக மிகப்பெரும் பொருட்செலவில்,  பிரமாண்டமான ‘செட்’கள், அதிரடி சண்டைகள், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகளுடன் அசத்தலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

"KICK" MOVIE NEWSFeatured
Comments (0)
Add Comment