ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’

சென்னை:

ஒரு படத்துடைய வெற்றி இளைஞர்களின் நாடித்துடிப்பைக் கொண்டுதான் நிர்ணயம் ஆகிறது என்றால் கவின் –  அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் அதை மிகச்சரியாக செய்துள்ளது. அதன் முதல் பார்வையில் இருந்து, அற்புதமான நடிகர்கள் தேர்வு, ட்ரெண்டியான பாடல்கள் ஆகியவை பார்வையாளர்களிடையே குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கவின், அபர்ணாதாஸ் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் இந்தப் படம் இளைஞர்களின் முதல் தேர்வாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10, 2023-ல் வெளியாகிறது என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய காரணம் எனும்போது ‘டாடா’ படத்தின் பாடல்கள், இசை ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. இதன் முதல் பாடலான ‘டாடா பாடல்’, ‘நம்ம தமிழ் ஃபோக்’ சமீபத்தில் வெளியான ’கிருட்டு கிருட்டு’ ஆகியவை பிப்ரவரி 10, 2023-ல்  திரையரங்குகளில் வெளியாகும் ’டாடா’ படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஆஷிக் AR-ன் பாராட்டும்படியான பாடல்வரிகள், ஜென் மார்டினின் பெப்பியான இசை மற்றும் சாண்டியின் எனர்ஜியான நடனம் என இந்த அணியின் புதுமையான கான்செப்ட் பாடல்களின் எதிர்ப்பார்ப்பை இன்னும் கூட்டி இருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிடுவதன் மூலம் ‘டாடா’ படத்திற்கு வர்த்தக வட்டாரத்திலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

’டாடா’ படத்தினை ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிக்க கணேஷ் கே பாபு படத்தினை இயக்கி உள்ளார். கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

ஒளிப்பதிவு: எழில் அரசு கே,
டி.ஓ.பி.: ஜென் மார்ட்டின்,
படத்தொகுப்பு: கதிரேஷ் அழகேசன்,
கலை: சண்முகராஜா,
நடனம்: சாண்டி,
சண்டைப் பயிற்சி: நைஃப் நரேன்,
ஒலி வடிவமைப்பாளர்: அருணாச்சலம் சிவலிங்கம்,
ஆடை வடிவமைப்பாளர்: சுகிர்தா பாலன்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: APV மாறன்,
மக்கள் தொடர்பு: டீம்  D’One

 

"DADA" MOVIE NEWSFeatured
Comments (0)
Add Comment