வருண் தவானுடன் இணைந்து பிரைம் வீடியோ இந்திய ஒரிஜினல் சிட்டாடலில் நடிக்கும் சமந்தா ரூத் பிரபு!

சென்னை:

திரைப்படத் தயாரிப்பில் தனித்துவம் வாய்ந்த இரட்டையர்களான  ராஜ் & டிகே உருவாக்கத்தில், தயாராகிவரும் இந்த ஒரிஜினல் தொடர் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக காட்சிப்படுத்தப்படும்

வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள், டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு வரிசை தேர்வுகளை விரைவாகவும் இலவசமாகவும் வழங்கல், மதிப்பு மிக்க சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீட்டிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், ஆகியவைகளோடு பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான் பிரைம் வழங்குகிறது. இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 1499 மட்டுமே உறுப்பினர் சந்தா செலுத்துவதன் மூலம் கிடைக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை ஆண்டுக்கு ரூபாய் 599 மட்டுமே செலுத்தி வாங்கலாம் – இந்த ஒற்றைப் பயனர், மொபைல் ஒன்லி வருடாந்திரத் திட்டம், பிரைம் வீடியோவின் உயர்தர பொழுதுபோக்கு மற்றும் நேரலை விளையாட்டுகளின் முழுப் பட்டியலுக்குமான அணுகலை வழங்குகிறது.

மும்பை, இந்தியா—பிப்ரவரி 1, 2023—ருஸ்ஸோ பிரதர்ஸின் AGBO குளோபல் ஈவண்ட்  தொடரான சிட்டாடல் யுனிவர்சின் இந்திய இன்ஸ்டால்மெண்டில் (installment) தலை சிறந்த நடிகையான சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) வருண் தவானுடன்(Varun Dhawan)  இணைந்து நடிக்கவிருப்பதை ப்ரைம் வீடியோ இன்று உறுதிசெய்திருக்கிறது.  இந்திய பின்னணியிலான இந்த பெயரிடப்படாத சிட்டாடல் தொடரை, புகழ்பெற்ற படைப்பாளிகளான இரட்டையர்கள் ராஜ்  & DK. (ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே) தலைமையில் உருவாகி வருகிறது. அவர்கள்தான்  இந்தத் தொடரின் முதன்மைத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள். இந்த உள்ளூர் அளவிலான தொடருக்கான கதையை ராஜ் & டிகே உடன் இணைந்து சீதா ஆர்.மேனன் (Sita R. Menon) எழுதியுள்ளார். இதன் தயாரிப்பு வேலைகள் தற்போது மும்பையில் நடைபெற்று வருவதையும் இதன் ஸ்ட்ரீமிங் சேவை வழங்குநர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, படப்பிடிப்புக் குழுவினர் வட இந்தியாவிற்கும், பின்னர் செர்பியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற சர்வதேச படப்பிடிப்புத் தளங்களுக்கும் செல்வார்கள் . இந்த இந்திய ஒரிஜினல் சிட்டாடலின் தொடரை உலகெங்கிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்களால் கண்டுகளிக்க முடியும்.

முன்னர் அறிவித்தபடி, ரிச்சர்ட் மேடன் (Richard Madden)  (பாடிகார்ட்) மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் (Priyanka Chopra Jonas) (குவாண்டிகோ) ஆகியோர் இந்தத் தொடரின்  முதல்-வெளியீட்டில் சிட்டாடல் யுனிவர்ஸில் நடிப்பார்கள், அது ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO இலிருந்து டேவிட் வேயீல் (David Weil) l (ஹண்ட்டர்ஸ்) உடன் வருகிறது மற்றும் 2023 இல் வெளியிடப்படவுள்ளது . மேடன் மற்றும் முதலில் வெளியிடப்படவிருக்கும் சோப்ரா ஜோனாஸுடனான சிட்டாடல் தொடரில் ஸ்டாண்ட்லி டுகி  (stanley Tucci) (தி ஹங்கர் கேம்ஸ் சாகா) யும் இடம்பெறும். மாடில்டா டி எஞ்சலீஸ் (Matilda De Angelis) (தி அன்டூயிங்) நடித்த இத்தாலியன் ஒரிஜினல் தொடர் உட்பட, மேலும் அதிக உள்ளூர் மொழிகளிலும்   சிட்டாடல் தயாரிப்புக்கள்  உருவாகிவருகின்றன.

“மீண்டும் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தனது ஸ்ட்ரீமிங் அறிமுகத்தை ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் இரண்டுடன் பிரைம் வீடியோவில்  தொடங்கிய அவர்,  இன்று திரைத்துறையில் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர்களில் ஒருவராகவும் விளங்கி வருகிறார். இந்தத் தொடரில் வருண் மற்றும் எங்களோடு அணிவகுத்துள்ள வியக்கத்தக்க திறமை வாய்ந்த  நடிகர்களின் குழுவோடு இணைந்து ஒரு முற்றிலும் புதிய அவதாரத்தில் அவரைத் திரையில் பார்வையாளர்கள் காண்பார்கள்.  ”என்று ப்ரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார்.

“சிட்டாடலின் இந்திய இன்ஸ்டால்மெண்ட்டின்  கேன்வாஸ் வாழ்க்கையை விட மேலான விசித்திரங்கள் நிறைந்தது , ஆனால் அதன் உருவாக்கம் மற்றும் நயம்  கடந்த காலத்தில் வேரூன்றிய மாறுபட்ட ஒன்று.  இந்தத் தொடர் இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் விரிவாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பயணத்தை  ராஜ் & டிகே தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வதாலும்,  அபார திறமைவாய்ந்த  நடிகர்கள் இருப்பதாலும், சிட்டாடலின் இந்திய அத்தியாயங்கள் அபாரமான ஆச்சரியப்படத்தக்க ஒன்றாக  இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

“தி ஃபேமிலி மேன் படத்திற்குப் பிறகு மீண்டும் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே , எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் இந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் ஒரு மிகப்பொருத்தமான தேர்வாக இருந்தார். அவரை எங்களோடு இணைத்துக்கொண்டதில் எங்களை விட வேறு யாரும்  மகிழ்ச்சியடைந்திருக்க  முடியாது..”என்று படைப்பாளி இரட்டையர்களான ராஜ் & டி.கே. கூறினார்கள்  “இந்தியாவின் சிட்டாடல் தயாரிப்பை தொடங்கியதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நாங்கள் செர்பியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்வதற்கு முன், இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. எங்களிடம் ஒரு அற்புதமான படப்பிடிப்புக் குழுவினர் மற்றும் மிகவும் திறமை வாய்ந்த  நடிகர்கள் உள்ளனர்,  இது ஆக்கப்பூர்வச்சிந்தனையோடு கூடிய நடைமுறைகளுக்கு  மேலும் உற்சாகமளிக்கிறது”.

இந்தத் திட்டம் குறித்து, பிரைம் வீடியோ மற்றும் ராஜ் & டிகேவும் என்னை அணுகியபோது, படபடக்கும் இதயத்துடன் இதை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தேன்! இந்த குழுவுடன் ‘தி ஃபேமிலி மேன்’ படத்தில் பணிபுரிந்த பிறகு, இது எனக்கு மீண்டும் ஒரு ஹோம்கமிங் ஆக இருக்கிறது ” என்று சமந்தா ரூத் பிரபு கூறினார். “சிட்டாடல் யுனிவர்ஸ் இன் கதைக்களம் , குளோப் முழுவதுமான அனைத்து தயாரிப்புகளுக்கு இடையே ஊடுருவி ஒன்றோடொன்று தொடர்புகொண்டு இணைக்கப்பட்ட ஒன்று  மற்றும் மிக முக்கியமாக, இதன் இந்திய இன்ஸ்டால்மெண்டின் ஸ்கிரிப்ட் எனக்கு  உண்மையாகவே மிகவும் உற்சாகமூட்டியது.” ருஸ்ஸோ சகோதரர்களின் கருத்தாக்கத்தில்  உருவான  இந்த மிகச்சிறந்த யுனிவர்ஸ் இன் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாயிருக்கிறேன்.. இந்த தயாரிப்பின் மூலம்  முதல்முறையாக வருணுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் நான்  எதிர்பார்க்கிறேன். அவர் மிகுந்த துடிப்புடன் உற்சாகமாக இருப்பதை அவர் அருகில்  இருக்கும்போது உங்களால் உணரமுடியும்.”

ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே ஆகியோர் தங்களது டி2ஆர் பிலிம்ஸ் பேனரின் கீழ் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாகவும் செயல்படுவார்கள்.. AGBO வின்  ஆண்டனி ருஸ்ஸோ, ஜோ ருஸ்ஸோ, மைக் லரோக்கா, ஏஞ்சலா ருஸ்ஸோ-ஓட்ஸ்டாட், ஸ்காட் நெம்ஸ் மற்றும் டேவிட் வெயில் (ஹண்டர்ஸ்) ஆகியோர் இணைந்து இந்தியன் ஒரிஜினல் மற்றும் குளோபல் சிட்டாடல் யூனிவர்சில் அனைத்துத் தொடர்களின் தயாரிப்புக்களையும்  மேற்பார்வையிட அதன் கீழ்   D2R ஃபிலிம்ஸ் மற்றும் அமேசான் ஸ்டுடியோஸ் இந்தத் தொடரை தயாரிக்கிறது. ஜோஷ் ஆப்பிள்பாம், ஆண்ட்ரே நெமெக், ஜெஃப் பிங்க்னர் மற்றும் ஸ்காட் ரோசன்பெர்க் ஆகியோர், பெயரிடப்படாத இந்தியன் ஒரிஜினல் மற்றும் குளோபல்  சிட்டாடல் யூனிவர்சில் உள்ள அனைத்து தொடர்களிலும் மிட்நைட் ரேடியோவின் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

 

 

Samantha Ruth Prabhu to Star Alongside Varun Dhawan in Prime Video’s India

 

FeaturedSamantha Ruth Prabhu to Star Alongside Varun Dhawan in Prime Video’s India News
Comments (0)
Add Comment