பிளாக்பஸ்டர் இயக்குநரான போயபதி ஸ்ரீனு, உஸ்தாத்ராம் பொதினேனியுடன் இணைந்துள்ள ‘BoyapatiRAPO’ படம் மாஸிவ் எனர்ஜியுடன் அக்டோபர் 20, 2023 அன்று வெளியீடு!

சென்னை:

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின், ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் பிளாக்பஸ்டர் இயக்குநரான போயபதி ஸ்ரீனு, உஸ்தாத் ராம் பொதினேனியுடன் இணைந்துள்ள #BoyapatiRAPO படம் மாஸிவ் எனர்ஜியுடன் அக்டோபர் 20, 2023 அன்று தசராவுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது

பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த இயக்குநர் போயபதி ஸ்ரீனு தற்போது உஸ்தாத் ராம் பொத்தினேனியுடன் இணைந்து ஒரு மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னரான #BoyapatiRAPO படத்தை இயக்குகிறார். பான் இந்தியன் படமாக இது அறிவித்த நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மிகப்பெரிய படத்தின் ரிலீஸ் தேதி இன்று போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் திரைப்படம் உலகம் முழுவதும் அக்டோபர் 20, 2023 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதை படக்குழு அறிவித்து ஒரு  போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். கலைந்த முடி மற்றும் அடர்ந்த தாடியுடன் போஸ்டரில் ராம் கடுமையாகவும் முரட்டுத்தனமாகவும் இருக்கிறார். அவர் தனது கையால் எருமையைக் கட்டுப்படுத்துவதை இந்த போஸ்டரில் பார்க்கலாம்.

ஒரு புதிய மாஸ் அவதாரத்தில் ராம் பொத்தினேனியை எனர்ஜியாக போயபதி ஸ்ரீனு காட்டியுள்ளார். இப்போது வெளியீட்டு தேதி அறிவித்ததும் படக்குழு ஒரு திருவிழாவுக்கு தயாராகி உள்ளது. மேலும் பண்டிகைக் காலங்களில் வெளியாகும் கமர்ஷியல் என்டர்டெய்னர்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை இதுவரை பெற்றுள்ளது.

அனைத்து கமர்ஷியல் அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருந்தாலும், ஆக்‌ஷனில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய போயபதி இதன் மீது கூடுதலாக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். சிறந்த தயாரிப்பில் மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகும் இப்படத்தில் ராமின் காதலியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார்.

இப்படத்தில் பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல்தர தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு, தொழில்நுட்ப ரீதியாக,  பல கோணங்களிலும் இந்தப்படம் வலுவாக உருவாகி வருகிறது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இப்படத்தை பவன்குமார் வழங்குகிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். படத்தொகுப்பை தம்முராஜும், ஒளிப்பதிவை சந்தோஷ் டிடேக் கையாண்டுள்ளனர்.

நடிகர்கள்: ராம் பொதினேனி, ஸ்ரீலீலா

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: போயபதி ஸ்ரீனு,
தயாரிப்பாளர்: சீனிவாசா சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்,
இசை: எஸ் தமன்,
ஒளிப்பதிவு: சந்தோஷ் டெடேக்,
படத்தொகுப்பு: தம்மிராஜு

 

 

 

 

2023 for Dusshera NEWSBoyapatiRAPO Massive Energy in theatres on October 20thFeatured
Comments (0)
Add Comment