அஜீத் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் வேண்டுகோள்!

சென்னை:

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தொடங்கி, பின் தமிழ் திரைப்பட துறையில் மாபெரும் வெற்றிப்படங்களை உருவாக்கியதோடு, அகில உலக அளவில் திரைத்துறையில் அழியாப் புகழ்பெற்ற நடிகர் அஜித்குமாரை  ‘அமராவதி’ எனும் திரைக்காவியம் மூலம் அறிமுகப்படுத்தியது ‘சோழா கிரியேஷன்ஸ்’. அதன் நிறுவனர் சோழா பொன்னுரங்கம் 1993 ஆம் ஆண்டு சோழா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து, வெளியிட்ட அமராவதி திரைப்படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகிவிட்டது.

அதை நினைவு கூர்ந்து கொண்டாடும் வகையில் வரும் 2023 மே 1′ ஆம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் ‘அமராவதி’ திரைப்படத்தை வெளியிடுகிறது ‘சோழா கிரியேஷன்ஸ்’ நிறுவனம். நவீன தொழில்நுட்ப முறையில் மாற்றம் செய்யப்பட்டு, ஒளி மற்றும் ஒலி ஆகியவை உயர் தொழில்நுட்ப வடிவில், புதிய பரிணாமத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ‘அமராவதி’ திரையிடப்படுகிறது.

தென்னிந்தியா முழுவதும் 400 திரையரங்குகளில் ‘அமராவதி’ திரைப்படத்தை வெளியிட ‘சோழா கிரியேஷன்ஸ்’ நிறுவனர் சோழா பொன்னுரங்கம் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.  நடிகர் அஜித்குமாரின் கோடான கோடி ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் செய்து வருகிறார்.

அஜித்குமாரின் அன்பு ரசிகர்களும், திரை உலக கலைஞர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் இந்த ‘அமராவதி’ திரைப்படத்தின் மறு வெளியிட்டிற்கு ஒத்துழைக்க வேண்டுமென தயாரிப்பாளர் ’சோழா’ பொன்னுரங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்!

 

Chozha Ponnurangam "Amarravathi" Movie NewsFeatured
Comments (0)
Add Comment