அருள்நிதி-துஷாரா விஜயன் நடித்துள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வெற்றி!

CHENNAI:

Actor Arulnithi, with his every movie, keeps escalating his stature as a bankable star of the box office and draws crowds to the theaters for his choice of unique scripts. With the slew of his previous releases proving it, the actor steps into the rural backdrop after a long time with his upcoming movie ‘Kazhuvethi Moorkkan’, directed by Sy Gowthamaraj and produced by Ambeth Kumar of Olympia Movies. The film’s teaser launched by actor Karthi, actress Keerthy Suresh, director Lokesh Kanagaraj and Producer Dhananjayan has witnessed a phenomenal response.

The teaser looks power-packed and clearly assures that the film will be a 100% family entertainer with the perfect blend of action, romance, family sentiments, and drama. The film is produced by Ambeth Kumar of Olympia Movies, whose recent release ‘Dada’ was a blockbuster hit. The film is directed by Sy Gowthamaraj, who shot to fame for his critically acclaimed movie ‘Ratchasi’.

While Dushara Vijayan is playing the female lead role, Santhosh Prathap, Saya Devi, Munishkanth, Sharath Lohithaswa, Raja Simman, Yaar Kannan, and a few others will be seen performing pivotal characters.  D Imman is composing the music, and Yugabharathi is penning the lyrics. Sridhar is handling the cinematography and Nagooran is overseeing editing.

ஒலிம்பியா மூவிஸ் அம்பேத் குமார் வழங்கும், ‘ராட்சசி’ புகழ் சை கௌதமராஜ் இயக்கத்தில், அருள்நிதி-துஷாரா விஜயன் நடித்துள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வருகிறது!

நடிகர் அருள்நிதி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும், பாக்ஸ் ஆபிஸில் ஒரு வெற்றி நட்சத்திரமாக தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார். மேலும், தனித்துவமான கதை அம்சம் கொண்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தன் படங்களைத் திரையரங்குகளுக்குப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளார். அவரது முந்தைய படங்களின் வெற்றி இதையே  நிரூபிக்கிறது. தற்போது, சை கௌதமராஜ் இயக்கத்தில், ஒலிம்பியா மூவீஸின் அம்பேத் குமார் தயாரிப்பில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமப்புற பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். நடிகர் கார்த்தி, நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள இந்த டீசரில் இருந்து,  ஆக்‌ஷன், காதல், குடும்ப உணர்வுகள் என படம் 100% குடும்ப பொழுதுபோக்குடன்  இருக்கும் என்பதை தெளிவாக உறுதிப்படுத்துகிறது. இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ளார். சமீபத்தில் ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தை ‘ராட்சசி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற சை கௌதமராஜ் இயக்கியுள்ளார்.

துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார் மற்றும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதாஸ்வா, ராஜா சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்திருக்க யுகபாரதி பாடல்களை எழுதுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் நாகூரன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

 

 

Arulnithi-Dushara Vijayan starrer "Kazhuvethi Moorkkan" teaser hits 3 Million + viewsFeaturedphenomenal response News
Comments (0)
Add Comment