கடல் கன்னியாக மாறிய ஜான்வி கபூர்.. வைரலாகும் வீடியோ!

சென்னை:

ராப் மார்ஷல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி லிட்டில் மெர்மெய்ட்’. இப்படத்தில் ஏரியல் வேடத்தில் ஹாலே பெய்லி, உர்சுலாவாக மெலிசா மெக்கார்த்தி, இளவரசர் எரிக்காக ஜோனா ஹவுர்-கிங், கிங் ட்ரைட்டனாக ஜேவியர் பார்டெம், செபாஸ்டியனாக டேவிட் டிக்ஸ், ப்ளோண்டராக ஜேக்கப் ட்ரெம்ப்ளே, ஸ்கட்டிளாக அவ்குவாபினா, நோமாவாக டுமேஸ்வேனி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏரியல் என்ற கடல் கன்னி நிலத்தில் வசிக்கும் இளவரசர் எரிக்கிடம் காதல் வசப்படுகிறாள். இவள் கடல் சூனியக்காரி உர்சுலாவுடன் ஒப்பந்தம் செய்து நிலத்தில் வாழும் வாய்ப்பைப் பெறுகிறாள்.

இதன் பின்னர் இவள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு மாயாஜால வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவரசி ஏரியலின் மாயாஜால உலகில் ஒரு ரசிகராக ஜான்வி கபூர் காலடி எடுத்து வைத்து ஏரியலாக மாறி தனது இளம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

"The Little Mermaid" Movie NewFeatured
Comments (0)
Add Comment