’சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட கதாநாயகன் பாலு வர்க்கீஸ், மாலைநேரத்தில் குறைவான வெளிச்சத்தில் பார்வை தெரியாமல் வாழ்கிறார். இப் பிரச்சனையால் அவரது திருமணம் நின்றுவிடுவதோடு செய்யும் வேலையும் பறிபோகிறது. வேலை பறி போனதால் சுயமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த சூழ்நிலையில் அவரின் அம்மா ஊர்வசியின் பூஜை அறையில் இருக்கும் விநாயகர் சிலையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்க ஒரு குழு முன் வருகிறது. அதே சமயம், புதிய கோவில் ஒன்றை கட்டி அதில் அந்த சிலையை வைக்க வேண்டும் என்று ஊர்வசியின் உறவினர்கள் முடிவு செய்கிறார்கள்.

பூஜை அறையில் இருக்கும் விநாயகர் சிலையை எடுத்து வீட்டின் வெளியே உள்ள ஓடாமல் இருக்கும் காரில் யாருக்கும் தெரியாமல் வைத்து விடுகிறார் பாலு வர்க்கீஸ். விநாயகர் சிலை மூலம் தனது வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பாலு வர்க்கீஸுக்கு அதே விநாயகர் சிலை மூலம் சில பிரச்சனைகள் வருகிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து வெளியே வர கலையரசனின் உதவியை கேட்கும் பாலு வர்க்கீஸ் முடிவில் கலையரசனின் உதவியால் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தாரா? அந்த விநாயகர் சிலையின் நிலை என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’

அப்பாவியான முகத்துடனும் அதற்கேற்ற நடிப்புடனும் வருகிறார் கதாநாயகன் பாலுவர்கீஸ். தன் குறைபாட்டைத் தாண்டிச் சாதிக்கவேண்டுமென்ற துடிப்பு ரசிகர்களை ரசிக்க வைக்கும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் கதைக்கேற்றபடி இயல்பாக நடிக்கிறார் .

படத்தின் தலைப்பில் வரும் சார்ல்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கலையரசன். கனமான கதையைச் சுமந்துசெல்வதில் கவனம் பெற்றாலும்.  இடைவேளைக்குப் பிறகு எண்ட்ரி கொடுப்பவர், அதன் பிறகு முழு படத்தையும்  ரசிக்க வைத்து அனைவரது பாராட்டையும் பெறுகிறார்.

பாலு வர்க்கீஸின் அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி, தனது இயல்பான நடிப்பு மற்றும் காமெடியான வசனம் மூலம் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். .அவருடைய படபடப்பு துடிதுடிப்பு ஆகியன அவருடைய வேடத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

நடிகர் குரு சோமசுந்தரம் இந்தப்படத்தில் ஊர்வசியின் கணவராக நடித்திருக்கிறார். அவருக்கு கொடுத்த வேலையைக் கருத்தாகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சுப்பிரமணியன் கே.வி-இன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் வித்தியாசத்தை காட்டி, படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவு சென்னையை பளிச்சென காட்ட முயற்சி செய்திருந்தாலும் கதாபாத்திரத்திரங்களை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.கதைக்களத்தை மாற்றிச் சொல்வதில் வெற்றி பெறவில்லை.

விநாயகர் சிலையை மையமாக வைத்து சமூக நீதி கருத்து பேசும் ஒரு படைப்பை இயல்பான திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம். இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு கடவுள் மனித வடிவில் உருவெடுத்து உதவி செய்யும் என்ற கருத்தை சொல்வதுடன் ஆன்மீக தொழிலே பெரும் லாபம் தரும் தொழில் என்பதை வலியுறுத்தும் விதமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம்.

மொத்தத்தில், ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ படத்தை பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

 

"Charlas Enterprises" Movie ReviewFeatured
Comments (0)
Add Comment