இயக்குநர் அட்லீ, விஜய் சேதுபதி மற்றும் “ஜவான்” படக் குழு உறுப்பினர்களுக்கு ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்திருக்கும் ஷாருக்கான்!

மும்பை:

ஷாருக்கான் ஜவான் குழுவிற்கு தனது நன்றியை தெரிவித்ததுடன், படத்தின் இயக்குநரான அட்லீயை, ”யூ ஆர் ட மேன்!!!’ என தெரிவித்திருக்கிறார்.

ஷாருக்கான் சமீபத்தில் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜவான் படத்தின் உற்சாகமான பிரிவ்யூவை வெளியிட்டார். இது தேசம் முழுவதும் தீயாக பரவியது. உயர்தரமான ஆக்சன் அதிரடி காட்சிகள்.. ஷாருக்கானின் வெல்ல முடியாத வசீகரம்… மற்றும் ஏராளமான உணர்வுகளால் நன்கு பதிக்கப்பட்ட பிரிவியூவானது, ஜவானின் அசாதாரணமான உலகத்தை பார்த்து, ரசிகர்கள் தங்கள் அன்பையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். இதனால் ஜவான் பட ப்ரிவ்யூ சமூக ஊடகங்களில் தீயாக பரவியது.

இந்த நட்சத்திரத்திற்கு தங்கள் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தது ரசிகர்கள் மட்டுமல்ல. இந்த ஆக்சன் திரில்லரில் ஷாருக்கான் உடன் நடித்தவர்கள் மற்றும் குழு உறுப்பினர்களான இயக்குநர் அட்லீ, சக நடிகர்களான விஜய் சேதுபதி, சுனில் குரோவர் மற்றும் ரித்தி டோக்ரா, இசையமைப்பாளர் அனிருத், பான் இந்திய நடன இயக்குநர் ஷோபி பால்ராஜ், நடிகர் யோகி பாபு, எடிட்டர் ரூபன் மற்றும் இணை தயாரிப்பாளர் கௌரவ் வர்மா ஆகியோரும் இந்த மெகா பட்ஜெட் படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். இதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இதனை பார்த்த கிங் கான் ஷாருக்கான், தானும் அணியினரிடம் அன்பை தெரிவிக்க அனைவருக்கும் பதிலளித்துள்ளார்.

‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

FeaturedShah Rukh Khan thanks AtleeVijay Sethupathi and other team members as Jawan prevue takes over the internet News
Comments (0)
Add Comment