ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

49

சென்னை:

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ஸ்வகதாஞ்சலி…’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை  ஆண்டனி  மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் + காமெடி + ஹாரர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமாரன் தலைமை பொறுப்பு வகிக்க.. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் வேட்டையனாக தோன்றும் ராகவா லாரன்ஸின் கேரக்டர் லுக்கும், சந்திரமுகியாக நடிக்கும் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தின் கேரக்டர் லுக்கும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ ஸ்வகதாஞ்சலி …’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணியின் மயக்கும் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் சைதன்ய பிரசாத் எழுத, பின்னணி பாடகி ஸ்ரீநிதி திருமலா பாடியிருக்கிறார். இந்தப் பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத் ஆடும் நடனத்தை டான்ஸ் மாஸ்டர் கலா வடிவமைத்திருக்கிறார். இந்தப் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் இணையத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைக்கா- ராகவா லாரன்ஸ்- கங்கணா ரணாவத்- பி வாசு -எம். எம். கீரவாணி கூட்டணியில் தயாராகி, ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Swagathaanjali, first single from Lyca’s ‘Chandramukhi 2’, released!

‘Swagathaanjali’, the first single from director P Vasu’s much-awaited horror-comedy, ‘Chandramukhi 2’, featuring actors Raghava Lawrence and  Kangana Ranaut in the lead and produced by none other than Lyca Productions Subaskaran, was released on Friday.

Chandramukhi 2, which happens to be ace director P Vasu’s 65th directorial, will also feature Vaigai Puyal Vadivelu, Mahima Nambiar, Lakshmi Menon, Srushti Dange, Rao Ramesh, Vignesh, Ravi Maria, Suresh Menon and Subiksha Krishnan among others.

The film has cinematography by R D Rajasekhar and music by Oscar  winner M M Keeravani.  Art direction is by eminent art director Thotta Tharani and editing is by Antony.

Lyca productions has produced this film, which has elements of action, horror and comedy, on a lavish scale.  Under the able leadership of G K M Tamilkumaran, work on the film, which is in its final stages, is progressing at a brisk pace.

The character looks of  Raghava Lawrence as Vettaiyan and Kangana Ranaut as Chandramukhi in the film, which were released some days ago by the film unit, have received a fabulous response from both fans and film buffs. The first looks have raised the already huge expectations from the film even higher.

It is under these circumstances that the makers of the film today released the first single from the film titled  ‘Swagathaanjali’.

Written by lyricist Chaitanya Prasad, the mesmerising number ‘Swagathaanjali’ has been set to tune by Oscar winner M M Keeravani and rendered by singer Srinidhi Tirumala. Kangana Ranaut as Chandramukhi appears in this number, the dance moves of which have been choreographed by dance master Kala. The makers of the film expect the single to be a sensational hit, garnering millions of views on the Internet.

The film, which has been made by a formidable unit comprising Lyca Productions, director P Vasu, actors Raghava Lawrence, Kangana Ranaut and music director M M Keeravani,  is scheduled to hit screens around the world for Vinayakar Chathurthi in several Indian languages including Tamil and Telugu.