கடத்தல்காரன்-பட விமர்சனம்

கடத்தல்காரன்-பட விமர்சனம்

246

1990 களுக்கு முன்பெல்லாம் கடத்தல்காரர்களின் சாகச கதைகள் சினிமாக்களாக வந்தன, ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு கடத்தல்காரன் படம். 

முழுக்க புதியவர்களின் முயற்சி .

திருட்டைக் குலத்தொழிலாக கொண்டு சின்சியராக செய்கிற ஒரு ஊரின் கதை! திருடச்செல்பவர்களை கோயிலில் விஷேச பூஜை செய்து ஆசீர்வாதம் செய்து அனுப்பும் ஊர்மக்கள்.

ஒரு கல்யாண மண்டபத்தில் களவாட நாலு இளைஞர்கள்உள்ளே நுழைகிறார் கள். அதே சயமத்தில் கல்யாணப்பெண் தன் காதலனுடன் ஓட்டம் எடுக்க காத்திருக்கிறாள். காதலன் கீழே நிற்கும் காரில் வந்து ஏறிகொள்ள சொல்லி போன் செய்ய மணப்பெண் காரில் ஏறிக் கொள்கிறாள். அதே நேரத்தில் திருடப் போன இடத்தில் பிரச்சனை ஏற்பட்டு மக்கள் துரத்த திருடர்கள் கார் எடுத்து தப்புகிறார்கள்

நடுவழியில் பார்த்தால் திருடர்கள் காரில் புதுமணப்பெண், அவள் கழுத்தில் 100 சவரன் நகை. பழம் நழுவி பாலில் அது நழுவில் வாயில் விழுந்தது போல திருடர்களுக்கு கொண்டாடம்.

திருடர்கள் தலைவன் கத்துகிறார். பொன் நகை திருட அனுப்பின என்னடா பொண்ண திருடி வந்திருக்கீங்க? என்று திட்ட , மக்கள் துரத்தியதால் நகைகளை கழற்ற நேரமில்லை, நகையோடு பெண் ணை கடத்தி வந்துட்டோம் என்கிறார்கள்.

அந்த நகையை சோதித்து பார்க்க அது கவரிங் . கடுப்பான திருடர்கள் தலைவன் அவளை யார் என்று விசாரிக்கிறான்.

அவள் ஒரு முன்னால் போலீஸ் அதிகாரியின் மகள் என்பதும். ஒரு திருட்டு பிரச்சனைக்காக அந்த ஊரில் ரத்த ஆறு ஓட விட்ட கொடுஞ்கோலான் என்று தெரியவருகிறது. அந்த அதிகாரி வந்தால் பழைய பகைதீர்த்துகொள்ள தயாராகிறது.

அந்த பெண்ணை மீட்க அவள் காதலன் பெண்வேடத்தில் வருகிறான், அந்தப் பெண் காப்பாற்ற பட்டாளா என்பது உச்சக் காட்சி.

நாயகன் தமிழாக கெவின், நாயகி கனிமொழியாக ரேணுசெளந்தர். இருவரும் நிறைவாக செய்திருக்கிறார் கள்.

இயக்குனர் எஸ். குமார் திரையில் கதைச்சொல்லதெரிந்தவர் என்பதை சில காட்சிகளில் நிருப்பிக்கிறார். இசை பிரபல எல்.வைத்தியன் அவர்களின் மகன் எல்ஏ கணேஷ் என்பது கூடுதல் சிறப்பு, அவரது இசையில் இரண்டு குத்து பாட்டு குத்தாட்டம் போட வைக்கின்றன.
இது முழுக்க புதியவர்களின் புது முயற்சி, குறைகள் இருந்தாலும், வாழ்த்தி வரவேற்போம்.

80%
Awesome
  • Design