2023 ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) world premier – க்கு தயாராகி வருகிறது, இயக்குனர் சுசி கணேசனின் “ தில் ஹே கிரே”

50

CHENNAI:

வினீத் குமார் சிங், அக்‌ஷய் ஓபராய் மற்றும் ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்த படம் இந்தியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு , பிரத்யேகக் காட்சியாக திரையிடப்படுகிறது. உலகளாவிய பிரீமியருக்கு முன், முற்றிலும் புதுமையான “ஆடியோ டீஸர் “செப்டம்பர் 11 மாலை இந்திய பெவிலியன் (TIFF )-இல் இந்திய அரசு இணைச் செயலாளர் மற்றும் எம்.டி  NFDC திரு பிரிதுல் குமார் அவர்களால் வெளியிடப்பட்டது.

பிரிதுல் குமார் பேசும்போது ,

“எங்களுக்கு சுமார் 65 படங்கள் தேர்வுக்கு வந்தன. வல்லுனர்களோடு படங்களைப் பார்த்தோம் .அவற்றில் இந்த ஒரு படம் எல்லா விதத்திலும் பொருந்துவதோடு ,  இந்தியாவின் கிரியேட்டிவ் எக்கானமியை சர்வதேச அளவில் வெளிப்படுத்த சரியானதென தேர்ந்தெடுத்தோம். மேலும் தொழில்நுட்ப ரீதியாகவும் , அனைத்து நடிகர்களின் நடிப்பும் அற்புதமாக இருந்தது . இந்த  “ஆடியோ டீஸர்” யோசனையும் புதுமையானது.இது பள்ளி நாட்களில் ஒலி நாடாக்களை மட்டுமே கேட்பதை நினைவுக்கு கொண்டுவந்தது . பல திரைப்பட வசனங்களை மனப்பாடம் செய்திருக்கிறோம் .. ஒலியை வைத்து , காட்சியை நாம் கற்பனை செய்து கொள்வோம் . அதுபோல இது கண்டிப்பாக  பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ”

இந் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சுசி கணேசன் ஹீரோயின்  ஊர்வசி ரவுடேலா மற்றும் இணை தயாரிப்பாளர் மஞ்சரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆடியோ டீஸர் வெளியீட்டு விழா குறித்து சுசி கணேசனிடம் கேட்டபோது

“இது ஒரு வரலாற்றுத் தருணம். ‘தில் ஹை கிரே’ ஆடியோ டீசரை அறிமுகப்படுத்த Tiff சரியான மேடையாக அமைந்தது. இது சினிமா ஆர்வலர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும்  புதுப்புது ஐடியாக்கள் தான் சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் . ஷூட்டிங்-ல்  “பதிவு செய்யப்பட்ட குரல்களுடன்”  ஒரு காட்சியை படமாக்கும்போது, ​​முழு செட்டும் பின் டிராப் அமைதியில் இருந்ததைக் கவனித்தேன் .. ஒவ்வொருவரும் குரலுக்கெற்றபடி கற்பனை செய்து கொண்டார்கள் .ஆடியோ டீஸர் யோசனை அப்போது  தோன்றியது”” என்றார்

படத்தின் நாயகி ஊர்வசி ரவுத்தேலா தனது எதிர்பார்ப்பை பகிர்ந்துகொண்டார் “இந்த படம் துவங்கும் போது எனக்கு இப்படி ஒரு தளம் கிடைக்கும் என கனவிலும் நினைக்கவில்லை . மேக்கப்பை அதிகம் விரும்பும் நான் இந்த படத்தில் மேக்கப் இல்லாமலே நடித்தேன் .. நடிகர்களிடம்  எப்படி வேலை வாங்க வேண்டுமென்பதை சுசி சாரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் “

நாளை வெளியாகும் உலகளாவிய பிரீமியருக்கு முன் இந்த ஆடியோ டீஸர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது

.