தி மாபோகோஸ் நிறுவனம் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ், சுரேஷ் ரவி நடிக்கும் ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம்!

57

CHENNAI:

நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் படங்கள் பார்வையாளர்களின் குட்புக்கில் இடம் பெறத் தவறுவதில்லை. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘சூது கவ்வும்’ போன்ற படங்களின் வெற்றியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அப்படியான ஒரு டார்க் காமெடி ஜானரில் ‘முஸ்தபா முஸ்தபா’ படம் உருவாகியுள்ளது.

தி மாபோகோஸ் நிறுவனம் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ், சுரேஷ் ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா மற்றும் விஜே மகேஸ்வரி, விஜே பார்வதி, லிவிங்ஸ்டன், சாம்ஸ், சூப்பர்குட் சுப்ரமணி (’ஜெய்பீம்’ படப்புகழ்), தீப்ஸ் (’பியார் பிரேமா காதல், ’ஸ்டார்’ படப்புகழ்), உமா பத்மநாபன், வினோத் (’இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘விக்ரம்’) ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது. இதன் ஆடியோ உரிமத்தை சரிகம பெற்றுள்ளது. சதீஷூக்கு ஜோடியாக மோனிகா சின்னகோட்லாவும், சுரேஷ் ரவிக்கு ஜோடியாக மானசா செளத்ரியும் நடித்துள்ளனர். கருணாகரன் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், புகழ், பாவெல் வித்தியாசமான நகைச்சுவை வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் பட வெளியீடு குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

நடிகர்கள்: சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா

தொழில்நுட்பக் குழு விவரம்:
எழுத்து & இயக்கம்: பிரவீன் சரவணன்,
தயாரிப்பு: மாபோகோஸ் நிறுவனம்,
தயாரிப்பாளர்: பிரதீப் மகாதேவன்,
ஒளிப்பதிவு: கே.எஸ்.விஷ்ணுஸ்ரீ,
இசையமைப்பாளர்: எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்,
எடிட்டர்: தினேஷ் பொன்ராஜ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா டி’ஒன்,
ஆடியோ உரிமம்: சரிகம.