ஷாருக்கானின் ‘ஜவான்’ பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து வெற்றி நடையுடன் கம்பீரமாக பயணிக்கிறது. உலகம் முழுவதும் 574.89 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது!
CHENNAI:
ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திற்கு மக்களின் பேராதரவு தொடர்கிறது. முதல் நாளிலேயே தனது பிரம்மாண்டமான வருகையை பதிவு செய்த நிலையில்.. ஒவ்வொரு நாளும் இந்தத் திரைப்படம் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதிரடி பொழுதுபோக்கு ஆக்சன், நாடகம், அழுத்தமான சென்டிமென்ட்.. என பலவற்றைக் கொண்டிருப்பதால் ஜவான் மக்களின் இதயங்களை ஆள்கிறார். இந்த திரைப்படம் ஏற்கனவே அதன் வெளியீட்டிற்கு முன்னதான முன்பதிவு மூலம் சாதனை படைத்திருந்தாலும், வெளியீட்டிற்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் புதிய வரலாற்றை உருவாக்கி இருக்கிறது. வெளியான ஐந்து நாட்களில் இந்தியாவில் மட்டும் 319.08 கோடி ரூபாயை வசூலித்து சாதனையை படைத்திருக்கிறது.
திங்கட்கிழமையன்று ஜவான் இந்தியில் மட்டும் 30.50 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் 2.42 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. மொத்தம் 32.92 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இதன் மூலம் திங்கட்கிழமையன்று 25.50 கோடியாக இருந்த பதானின் வசூலை.. ஷாருக் கான் தனது சொந்த படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறார். ‘ஜவான்’ பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வலுவான சாதனையை நிகழ்த்தி வருகிறது. மேலும் வார இறுதிக்குப் பிறகு அதன் வசூல் அதிகரித்திருக்கிறது. உலகம் முழுவதும் நாளொன்றுக்கு நூறு கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்து வருகிறது.
ஜவான் படத்தின் இந்திய அளவிலான வசூலை.. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் பார்த்தோமானால், இந்தியில் மட்டும் இந்த திரைப்படம் 282.52 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. மற்ற மொழிகளில் 36.50 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. ஆக இந்தியாவில் மட்டும் ஜவான் திரைப்படம் 319.08 கோடி ரூபாயை வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.
ஜவான் திரைப்படம் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் ஏழாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
Shah Rukh Khan’s Jawan enjoying a thunderous run at the box office! Garners a whopping numbers – garners an astounding 574.89 Cr. Gross Worldwide and 319.08 Cr. Net India in just 5 days!
There is no stop for Shah Rukh Khan’s Jawan. Having booked its magnanimous arrival on the first day itself, the action entertainer only created records with every coming day. Bringing a plethora of action, drama, and thrill, Jawan is ruling over the hearts of the masses like madness. While the film has already engraved its name in the record books with its phenomenal advance bookings, it certainly created history at the box office with its release. Having enjoyed a phenomenal run, today the film is standing on its 5th day and numbers are not at all settling down as the total of 5 days amounted to 319.08 Cr. Pan India.
On Monday, Jawan raked in 30.50 Cr. nett in the Hindi market and 2.42 Cr. in Tamil and Telugu which made its total 32.92 Cr. With this, SRK is beating his own record of Pathaan whose collection on Monday was 25.50 Cr. Jawan has kept a strong hold at the box office. Moreover, after a massive weekend, its collections are still at the highest levels. The film is clocking 100+ cr at global box office per day!
Looking at Jawan’s pan India collection, The overall Hindi collection of 5 days is now standing at 282.58 Cr. and 36.50 Cr. in other languages which made its total to 319.08 NET Cr. Pan India.
‘Jawan’ is a Red Chillies Entertainment presentation directed by Atlee, produced by Gauri Khan, and co-produced by Gaurav Verma. The film was released worldwide in theatres on September 7th, 2023, in Hindi, Tamil, and Telugu languages.