“மார்க் ஆண்டனி”” திரைப்பட விமர்சனம்!

49

சென்னை:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால்எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரித்து வர்மா, சுனில் ரெட்டி, நிழல்கள் ரவி, அபிநயா, மீரா கிருஷ்ணன்,Y.G.மகேந்திரா, ரெடின் கிங்ஸ்லிசென்ட்ராயன், விஷ்ணு பிரியா காந்தி, டத்தோ ஸ்ரீஜி ஞானராஜா மற்றும் பலர் நடித்துள்ள படம் “மார்க் ஆண்டனி” இபடத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பு பணிகளை செய்திருக்கிறார். கனல் கண்ணன், பீட்டர் ஹெயின்திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன் ஆகிய நால்வரும் சண்டைப் பயிற்சிகளை இயக்கியுள்ளார்கள்.

கலை இயக்கம் உமேஷ் ராஜ்குமார், உடைகள் சத்யா N.J., நடன இயக்கம் தினேஷ், அஸார், பாடல்கள் மதுர  கவி ,அஸல்  கோலாறு, நிர்வாக தயாரிப்பு சொக்கலிங்கம், பத்திரிக்கை தொடர்பு: ரியாஸ் கே.அஹ்மத், புகைப்படங்கள் R.S.ராஜா, விளம்பர வடிவமைப்பு கபிலன்.

தற்போது இந்தப் படம் வெளிவந்து வெற்றிகரமாக அனைத்து திரையரங்குகலிலும் ஓடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இதன் விமர்சனத்தைப் பார்ப்போம்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதால், இப்படம் தொடங்கும் காட்சியில் விஞ்ஞானி செல்வராகவன் கடந்த காலத்துக்கு சென்று அவர்களுடன் பேசி நடந்த சம்பவங்களை மாற்றும் சக்தி கொண்ட ஒரு டெலிபோன் டைம் மிஷினை கண்டு பிடிக்கிறார். இது அவரது வாழ்க்கையில் இன்னும் நிறைய அதிசயங்களை இந்த டெலிபோன் டைம் மிஷின் மூலம் செய்ய முடியும் என்கின்ற நிலையில் அவர் கொல்லப்படுகிறார்.

இப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவருமே இரட்டைவேடங்களில் நடித்திருக்கிறார்கள். இருவரும் அப்பா மகனாகவே நடித்திருக்கிறார்கள்.  ஆண்டனி விஷாலின் உயிர் நண்பரும் பெரிய தாதாவுமான ஜாக்கி பாண்டியன் என்ற  எஸ்.ஜே.சூர்யா, உயிர் நண்பன் ஆண்டனி  மகன் மார்க் விஷால்  மீது அளவற்ற பாசத்தைப் பொழிந்து வளர்க்கிறார்.

மார்க்கின் தந்தையான ஆண்டனி, தன் அம்மாவையே கொன்றவர் என்பதால், ஆண்டனி  பெயரை சொன்னாலே மகன் மார்க்குக்கு வெறுப்பு ஏற்படுகிறது. ஒரு நாள் மகன் விஷாலின் காதலியான ரித்து வர்மா மெக்கானிக் ஷாப்பிற்கு வந்து, தங்களது காரை சர்வீஸ் செய்து கொடுக்கும்படி கேட்கிறார். இந்த சூழ்நிலையில் 1975 இல் விஞ்ஞானி செல்வராகவன் கண்டுபிடித்த, அந்த டெலிபோன் டைம் மிஷின் அந்த காரில் இருப்பதை கண்டுபிடிக்கிறார் மகன் மார்க் விஷால். அந்த டைம் மிஷின் டெலிபோன் மூலம் தன் அம்மாவை கொலை செய்த தன் தந்தையை திட்டி தீர்க்க  அவரை தொடர்பு கொள்கிறார் மார்க்.  அப்போதுதான் தன் தந்தை ஆண்டனி விஷால், நல்லவர் என்று தெரிய வருகிறது. அவரை மீண்டும் உயிருடன் வர வழைக்க முயல்கிறார் மார்க் விஷால்.

மேலும் தன் தந்தை ஆண்டனி விஷாலை கொன்றது எஸ்.ஜே.சூர்யாதான் என தெரிந்து கொள்கிறார் மகன் மார்க்  விஷால். தன்னை வளர்த்த ஜாக்கி பாண்டியன் என்ற  எஸ்.ஜே.சூர்யாவை பழி வாங்க துடிக்கிறார் மகன் மார்க்  விஷால். இறுதியில் ஜாக்கி பாண்டியன் என்ற  எஸ்.ஜே.சூர்யாவை  பழி வாங்கினாரா? அந்த டெலிபோன் டைம் மிஷினால் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? என்பதுதான் இந்த “மார்க் ஆண்டனி” திரைப்படத்தின் மீதிக்கதை.

ஆண்டனி என்ற தந்தை கதாப்பாத்திரத்திலும், மார்க் என்ற மகன் கதாப்பாத்திரத்திலும், மாறுபட்ட  தோற்றங்களில் நடித்து மிரட்டிருக்கிறார் விஷால். வித்தியாசமான மேக்கப்புடன், உடல்மொழி என அனைத்தையும் சிறப்பாக கையாண்டு அமர்க்களப்படுத்துகிறார். மகன் மார்க் கதாபாத்திரத்தில் வரும் விஷால் மிகவும்  சாதுவாக நடித்திருக்கிறார். மெக்கானிக் என்பதால் அதற்கு தேவையான நடிப்பை மட்டும் வழங்கியிருக்கிறார். நடிப்பில் மட்டும் அல்ல, வசன உச்சரிப்பிலும் இரு கதாபாத்திரங்களுக்கிடையில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார் விஷால்.

விஷாலைப் போல எஸ்.ஜே.சூர்யாவும் அப்பா ஜாக்கி பாண்டியன், மகன் மதன் பாண்டியன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். டைட்டிலில் அவர் பெயர் போடும்போது ‘நடிப்பு அரக்கன்’ என்ற அடைமொழி சேர்த்திருப்பதற்குப் பொருத்தமாக நடிப்பில் அசுரத்தனமான ஒரு வேகத்தை காட்டி நடித்திருக்கிறார். அதிலும், தந்தை மற்றும் மகன் எஸ்.ஜே.சூர்யா இடையில் நடக்கும் தொலைபேசி உரையாடல் காட்சி ரசிகர்களை எழுந்து நின்று ஆரவாரம் செய்ய வைக்கிறது. அடுக்கு மாடி பஸ்ஸில் சில்க் ஸ்மிதாவை சந்திக்கும் காட்சியில் எஸ்.ஜே.சூர்யா நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து, கைதட்டலும், சிரிப்பலையும், விசில் சத்தமுமாக திரையரங்கமே அதிர்கிறது.

விஞ்ஞானியாக வரும் செல்வராகவன் அனைவரும் அசந்து அளவிற்கு கை தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் சுனில் மிக அருமையாக நடிப்பிலும் ஆக்ஷனிலும் அசத்தியிருக்கிறார். மற்றும் ரித்து வர்மா, ரெடின் கிங்க்ஸ்லீ  நிழல்கள் ரவி, விஷ்ணு பிரியா காந்தி, அபிநயா, சென்ராயன் ஆகியோர் தங்களுக்கான கொடுத்த பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இரண்டு தாதாகளுக்கு இடையில் ஏற்படும்  நட்பு மற்றும் துரோகம் என்ற வழக்கமான கதையை மையமாக வைத்து டைம் டிராவலர் என்ற டெலிபோன் டைம் மிஷினால் ஏற்பட்ட பிரச்சினைகளை புதிய கோணத்தில், தற்போதுள்ள இளம் ரசிகர்களுக்காக சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ். திரையரங்கை தெறிக்கவிடும் பின்னணி இசையில் மிரட்டுவதுடன், ‘ஆண்டனி டா’ என டி.ராஜேந்தர் குரலில் ரசிக்க வைக்கும் பாடல் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், கனல் கண்ணன், தினேஷ் சுப்பராயன் ஆகியோரின் சண்டை பயிற்சிகளை பார்க்கும்போது, உண்மையிலேயே இப்படத்தின் பெரிய  வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன.

மொத்தத்தில், இந்த ‘மார்க் ஆண்டனி’ பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.