1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கும் ஷாருக் கானின் ‘ஜவான்’

49

CHENNAI:

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 19 நாட்களில் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் இந்த திரைப்படம் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரே ஆண்டில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்கள் தலா 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருப்பதுடன்.. இத்தகைய சாதனையைப் படைத்த ஒரே நடிகர் என்ற பெருமிதத்தையும் அவர் பெற்றிருக்கிறார்.

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை மறு வரையறை செய்துள்ளது. இப்படத்தின்  கதைக்களம் மற்றும் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பு மூலம் பார்வையாளர்களை வசீகரித்துள்ளது. சாதனை புத்தகத்தில் புதிய அத்தியாயத்தை இந்த திரைப்படம் எழுதி இருக்கிறது. ஜவான் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், இப்படத்தின் வசூல் புதிய சாதனையை படைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்திற்கு நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து அபிரிமிதமான வரவேற்பு கிடைத்து வருவதால் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தத் திரைப்படம் மாபெரும் சினிமா ஆற்றலாக கணக்கிடப்பட வேண்டும்.

மேலும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் செய்து வருவதால்… இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள ஷாருக்கான் ரசிகர்களுக்கு ‘ஜவான்’ திரைப்படத்தை ஒரு சினிமா திருவிழாவை போல் கொண்டாடி வருகிறார்கள்.

‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மெண்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Jawan surpasses the 1000cr milestone worldwide In just 19 days, is a GLOBAL SENSATION!

SRK becomes the first actor to have two films grossing 1000cr each in a single year!

‘Jawan’ has redefined box office success, captivating audiences with its gripping storyline and stellar performances, and rewriting the record books along the way.As ‘Jawan’ continues to dominate the box office, its relentless pursuit of milestones and records showcases the film’s unwavering appeal and the immense love it has received from audiences nationwide. ‘Jawan’ is undoubtedly a cinematic force to be reckoned with.

The film’s remarkable performance at the box office shows no signs of slowing down, For SRK fans in India and around the world, #Jawan has been nothing short of a cinematic festival,  making its presence felt by garnering astounding numbers in record time.

‘Jawan’ is a Red Chillies Entertainment presentation directed by Atlee, produced by Gauri Khan, and co-produced by Gaurav Verma. The film was released worldwide in theatres on September 7th, 2023, in Hindi, Tamil, and Telugu.