“இறைவன்” திரைப்பட விமர்சனம்!

41

சென்னை:

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “இறைவன்”. இப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன், விஜயலட்சுமி, ராகுல் போஸ்.வினோத் கிஷன், ஆஷிஷ் வித்யார்த்தி, சார்லி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ஹரி.கே.வேதாந்த், படத்தொகுப்பாளர் ஜெ.வி.மண்கண்ட பாலாஜி, கலை இயக்குநர் ஜாக்கி, பிஆர்ஒ- சுரேஷ் சந்திரா.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

கதாநாயகன் ஜெயம் ரவி மற்றும் நரேன் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருக்கும் சூழ்நிலையில் இவர்கள் இருவரும் காவல்துறை அதிகாரிகளாக பணியாற்றி வருகிறார்கள். நரேனின் தஙகை கதாநாயகியான நயன்தாரா,ஜெயம் ரவி மீது அன்பு செலுத்தி காதலித்து வருகிறார். ஆனால் ஜெயம் ரவிக்கு, நயன்தாராவின் மீது கொஞ்சம் கூட  பாசம் இல்லாமல், காவல்துறையில் பணி புரிவதால், எப்போது வேண்டுமானாலும் இறந்து விடுவேன்…என்று சொல்லி காதலை நிராகரித்து தவிர்த்து வருகிறார்.  இந்த சூழலில் சென்னை நகரில் 12 கன்னிப் பெண்கள்  அடுத்தடுத்து கடத்தப்பட்டு கொடூரமாக  சித்திரவதை செய்து கொலை செய்யப்படுகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது.  இதற்கு காரணமான ஸ்மைலி சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க, போலீஸ் துறையில் உள்ள அசிஸ்டெண்ட் கமிஷனர் ஜெயம் ரவியும், அவரது நண்பர் நரேனும் நியமிக்கப்படுகின்றனர்.

போலீசாரின் தீவிர வேட்டையில் சைக்கோ கொலைகாரனை பிடிக்கும்போது அந்த கொலைகாரன் நரேனை கொலை செய்து விடுகிறார். நரேன் இறக்கும்போது ஜெயம் ரவியிடம்  தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள சொல்லி இறக்கிறார். தனது உயிர் நண்பரான நரேன் இறந்த சோகத்திலிருந்து மீள முடியாமல் தான்  பணிபுரிந்த போலீஸ் துறை வேலையை விட்டு விலகி, சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ஜெயம் ரவி .  இந்த நிலையில் சிறையிலிருக்கும் சைக்கோ கொலைகாரன் தப்பி மீண்டும் தொடர் கொலையில் ஈடுபடுகிறான். இதனால் தனது வேலையை ராஜினாமா செய்தாலும் சைக்கோ  கொலைகாரனை கண்டுபிடிப்பதில் மீண்டும் தீவிரம் காட்டுகிறார் ஜெயம் ரவி. கடைசியில் ஜெயம் ரவி சைக்கோ  கொலைகாரனை கண்டுபிடித்தாரா? இல்லையா/ என்பதுதான் “இறைவன்” படத்தின் மீதிக் கதை.

கதாநாயகன் ஜெயம் ரவி போலீஸ்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மிகவும் மிரட்டலாக நடித்திருந்தாலும், ஒரு கம்பீரம் இல்லாமல் ஏதோ ஒரு சோகத்துடன் பயணித்து இருப்பது, நடிப்பில் ஸ்கோர் செய்யவில்லை. இறுதிக்காட்சி வரை ஆக்ரோஷம் நிறைந்த போலீஸ் அதிகாரியாக விரைப்புடன், இறுகிய முகத்துடன் நடிப்பில் அதிக கவனம் செலுத்த்வில்லை.

கதாநாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா தன் அழகான உடல் அசைவால், தன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பை கொடுத்துள்ளார். நயன்தாரா தான் வாங்கிய சம்பளத்திற்கு ஏற்றவாரு வேலை செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஸ்மைலி சைக்கோ வில்லனாக மிரட்டும் ராகுல் போஸ் அதிகமான வசனம் பேசாமல் தன் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார் .ஆனால் மற்றொரு சைக்கோ வில்லனாக வினோத் கிஷனின் ஓவரான  நடிப்பு நமக்கு வெறுப்பை  வரவழைக்கிறது.

விஜயலட்சுமி, சார்லி, அழகம் பெருமாள், ஆஷிஷ் வித்யார்த்தி, பக்ஸ் அனைவரும் வந்து போனாலும், படத்திற்கான சிறிய பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இல்லை. பின்னணி இசையும் ரசிக்கும்படி இல்லை.

ஹரி கே வேதாந்தத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய அளவில் பக்க பலம் என்றாலும், சைக்கோ திரைப்படத்திற்கான மனநிலையை தனது ஒளிப்பதிவு மூலம்  தாங்கிப் பிடித்துள்ளார்..

தொடக்கம் முதல் தொடர்ந்து கொலைகள் செய்து இரத்த ஆறு ஓட வைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் ஐ. அஹமத்,  இப்படி கவனக்குறைவாக, சைக்கோ கில்லர் கதையை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்து இருந்தாலும்,  திரைப்படத்தின் இடைவேளைக்கு முன் இருந்த, விறுவிறுப்பும், பரபரப்பும் இடைவேளைக்குப் பின் குறைந்தது அதிக ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

மொத்தத்தில் “இறைவன்” திரைப்படம் த்ரில்லர் ரசிகர்களுக்கு விருந்து படைக்காது.

ரேட்டிங்: 2/5.

RADHAPANDIAN.