சென்னை:
ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் 28 ஆம் தேதி வெளியாகி இருக்கும் படம் இசை பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் “வாழ்வு தொடங்குமிடம் நீதானே” இப்படத்தில் சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபெராஸ், ஆறுமுகவேல், ஆர்ஜே பிரதீப், ஷங்கர், நிரஞ்சன், தஸ்மிகா, கண்ணன், மாறன் கார்த்திகேயன், எச் எம் மகேஷ், சிவசக்தி, சுதா பிரசாத், மற்றும் பலர் நடித்திருக்கிறனர்..
எழுத்து & இயக்கம் :- ஜெயராஜ் பழனி..ஒளிப்பதிவு :- எஸ் கோகுலகிருஷ்ணன். படத்தொகுப்பு :- விக்னேஷ் R.L. இசையமைப்பாளர் :- தர்ஷன் ரவிக்குமார். தயாரிப்பு நிறுவனம்:- இசை பிக்சர்ஸ் .தயாரிப்பாளர்கள் :- இசை, அதிதி இசை, அத்வைதா இசை நீலிமா இசை.
இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
தற்போது அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன் போன்ற வெளி நாடுகளில் ஒரு ஆண் இன்னொரு ஆண் மகனை காதலிப்பதும், ஒரு பெண் இன்னொரு பெண்ணை காதலிப்பதும் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இந்த உறவை லெஸ்பியன் என்று சொல்வார்கள். இப் படத்தின் இயக்குனர் ஜெயராஜ் பழனியும் தயாரிப்பாளர் – நடிகை நீலிமா மற்றும் அவரது கணவர் இசையும் பெண்ணும் பெண்ணும் காதலிக்கும் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதுபோல் நடப்பது சாத்தியமா? என்பது தெரியவில்லை.
தரங்கம்பாடியில் கடற்கரையோரத்தில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில், கதாநாயகி நிரஞ்சனா நெய்தியாருக்கான திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நிரஞ்சனா நெய்தியாருக்கு அந்தத் திருமணத்தில் விருப்பமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். காரணம் கிராமத்து பெண்ணான நிரஞ்சனா நெய்தியாரும், நகரத்தில் வாழும் ஆவணப்பட பெண் இயக்குநரான ஸ்ருதி பெரியசாமியும் சில நாட்கள் ஒரே வீட்டில் தங்கும் போது, இவர்களிடையே காதல் உருவாகிறது. இதை தெரிந்துக் கொண்ட நிரஞ்சனா நெய்தியாரின் தந்தை அவருக்கு அவசரமாக திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளை செய்கிறார்.
சிறுவயதிலிருந்து தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள போகிறோம் என்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறார் மணமகன் அர்ஷத். இந்நிலையில் திருமணத்திற்கு முந்தையை நாள் நிரஞ்சனா நெய்தியார் அர்ஷத்தை தனியாக அழைத்து தான் ஸ்ருதி பெரியசாமி என்ற பெண்ணை விரும்புவதாக சொல்லி அர்ஷத்துக்கு அதிர்ச்சியை கொடுகிறார். ஸ்ருதி பெரியசாமியை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் என எங்கள் இருவரையும் சேர்த்து வைக்குமாறு அர்ஷத்திடம் உதவி கேட்கிறார். இதனால் ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போன அர்ஷத். நிரஞ்சனா நெய்தியாரை திருமணம் செய்துக் கொண்டாரா? தன் பாலினச் சேர்க்கையால் நிரஞ்சனா நெய்தியாருக்கு நடந்த விளைவுகள் என்ன? என்பதுதான் “வாழ்வு தொடங்குமிடம் நீதானே” படத்தின் மீதிக் கதை.
இரண்டு வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிரஞ்சனா நெய்தியார் மற்றும் ஸ்ருதி பெரியசாமி இருவரும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார்கள். நிரஞ்சனா நெய்தியார் கண்களும் உதடுகளும் மிக அழகாக இருக்கின்றன. நடிப்பும் நேர்த்தியாகவே இருக்கிறது.அவர்கள் இருவர் இடையிலான உறவும், உன்னதமான காதல் என்பதை நிரூபிக்க இருவரும் போராடும் காட்சிகளில் நடிப்பில் அசத்தி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகனாக வரும் அர்ஷத் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்கிறார். இப்படத்தில் நடித்திருக்கும் ஆறுமுகவேல், ஆர்ஜே பிரதீப், ஷங்கர், நிரஞ்சன், தஸ்மிகா, கண்ணன், மாறன் கார்த்திகேயன், எச் எம் மகேஷ், சிவசக்தி, சுதா பிரசாத், அனைவரும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.
சதீஷ் கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு கடற்கரை மற்றும் கடற்கரை சார்ந்த பகுதிகளை கலை அழகுடன் பதிவு செய்து இருக்கிறது. இசையமைப்பாளர் தர்ஷன் குமாரின் பின்னணி இசை, படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது.
இயற்கைக்கு மாறான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும், தன் பாலினச் சேர்க்கையால் ஏற்படும் உறவுகளை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில், நம் சமுதாயத்தில் இந்த மாதிரியான ஆண், பெண்களுக்கு உள்ள சுதந்திரத்தை போல் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கும் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்கிற கருத்தை தொடர்ந்து மறுத்து வரும் நிலையில்,மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி அழுத்தமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஜெயராஜ் பழனி.
மொத்தத்தில் இந்த” வாழ்வு தொடங்குமிடம் நீதானே” ஓரினச்சேர்க்கையாளர்களைப்பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய படம்.
ரேட்டிங் 2/5.
RADHAPANDIAN.