கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் “கோஸ்ட்” பட டிரைலரை வெளியிட்ட தனுஷ்!

61

சென்னை:

கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பான் இந்தியா அளவில் பிரம்மாண்ட திரைப்படம் “கோஸ்ட்” அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. இயக்குனர் ஸ்ரீனி இந்த படத்தை தலைசிறந்த சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்‌ஷன் படமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனமுடன் செயல்பட்டு வருகிறார்.

முன்னணி அரசியல் தலைவரும், தயாரிப்பாளருமான சந்தேஷ் நாகராஜ் இப்படத்தை சந்தோஷ் புரோடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். தசரா பண்டிகையை ஒட்டி அக்டோபர் 19 ஆம் தேதி “கோஸ்ட்” திரைப்படம் கன்னடா, தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் தமிழ் மொழிக்கு சிவராஜ் குமார் நேரடியாக டப்பிங் பேசி இருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் “கோஸ்ட்” திரைப்படத்தின் டிரைலரை படக்குழு அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிட்டது. இந்திய அளவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் எஸ்.எஸ். ராஜமௌலி “கோஸ்ட்” படத்தின் தெலுங்கு டிரைலரை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டார். தமிழில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். டிரைலர் முழுக்க மிரள வைக்கும் சண்டை காட்சிகள் மற்றும் அதிரடியான பின்னணி இசை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த டிரைலர் “கோஸ்ட்” பட உலகிற்கு நம்மை அழைத்து செல்கிறது. சிவராஜ்குமாரின் வேற லெவல் திரை ஆளுமை மற்றும் இயக்குனர் ஸ்ரீனியின் படைப்பு, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. இத்துடன் அனல் பறக்கும் வசனங்கள் சிவராஜ்குமாரின் மாஸ் அம்சத்தை திரையில் பிரதிபலிக்க செய்துள்ளது. இசையமைப்பாளர் அர்ஜூன் ஜான்யா டிரைலருக்கு ஏற்ற வகையில், சிறப்பான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். சிவன்னாவின் இளமை மிக்க தோற்றம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இதன் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

முன்னணி பாலிவுட் வினியோகஸ்தர் ஜெயந்திலால் கடா பென் மூவிஸ் சார்பில் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமத்தை பெற்று இருக்கிறார். “கோஸ்ட்” திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி உள்ளனர்.

அதன்படி வசனம் மஸ்தி மற்றும் பிரசன்னா வி.எம்., இசை அர்ஜூன் ஜான்யா, ஒளிப்பதிவு மகேந்திர சிம்ஹா மேற்கொண்டுள்ளனர். புரோடக்‌ஷன் டிசைன் பணிகளை பி.ஆர்.ஒ. மோகன் பி கெரெ மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்புற்கு பி.ஏ. ராஜுவின் குழுவினர் விளம்பர பணிகளை மேற்கொள்கிறது. சந்தோஷ் புரோடக்‌ஷன்ஸ் தயாரித்து இருக்கும் “கோஸ்ட்” படம் கன்னடா, தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.

நடிகர்கள் விவரம் :

சிவராஜ்குமார், அனுபம் கெர், ஜெயராம், பிரசாந்த் நாராயணன், அர்சனா ஜொயிஸ், சத்யபிரகாஷ், தட்டன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு நிறுவனம்: சந்தோஷ் புரோடக்‌ஷன்ஸ் (31-வது படம்)
வழங்குபவவர்: சந்தோஷ் நாகராஜ் (எம்.எல்.சி.)
தயாரிப்பாளர்: சந்தேஷ் என்
கதை மற்றும் இயக்கம்: ஸ்ரீனி
இசை: அர்ஜூன் ஜான்யா
ஒளிப்பதிவு: மகேந்திர சிம்ஹா
வசனம்: பிரசன்னா வி.எம்., மஸ்தி
சண்டை பயிற்சி: சேத்தன் டி சௌசா, வெங்கட் (ஐதராபாத்), அர்ஜூன் ராஜ், மாஸ் மாதா
படத்தொகுப்பு: தீபு எஸ் குமார்
தயாரிப்பு வடிவமைப்பு: மோகன் பி கெரெ
வி.எஃப்.எக்ஸ். மேற்பார்வை: முகமது அப்தி
வி.எஃப்.எஸ்.: அசூ ஸ்டூடியோஸ் (தெஹ்ரான்)
கலரிஸ்ட: அமிர் வலிகனி
டி.ஐ. ஸ்டூடியோ: ஃபியூச்சர் ஏஜ் ஸ்டூடியோ
சவுண்ட் எஃபெக்ட்ஸ்: ராஜன்
டி.டி.எஸ். மிக்சிங்: மஞ்சரி ஸ்டூடியோஸ்
போஸ்ட் புரோடக்‌ஷன்: பி.ஆர்.கே. ஸ்டூடியோஸ்
இணை இயக்கம்: அமோகவர்ஷா, பிரசன்னா வி.எம்.
இயக்குனர் குழு: கிரன் ஜிங்கல், ஸ்ரீனிவாஸ் ஹெச்.வி. மற்றும் மஞ்சு ஹெச்.ஜி.
டிரோன் கேமரா: ராஜ் மோகன்
கேமரா குழு: மனு பிரசாத், சுரேஷ் மற்றும் நிவாஸ்
இணை படத்தொகுப்பாளர்: மகேஷ்
ஆன்லைன் படத்தொகுப்பு: சரண்
கூடுதல் பி.ஜி.எம்.: அகஸ்தயா ராக்
ஆடை: சாந்தாராம், பரத் சாகர் (சிவராஜ்குமார்)
மேக்-அப்: சிதானந்த், ஹொன்னெ கௌட்ரு
மேலாளர்: சுரேஷ் கே மைசூரு
துணை மேலாளர்கள்: ராகேஷ் ராவ், கார்திக் என்.கே.
காசாளர்: பிரசாத் பி.என்.
விளம்பர வடிவமைப்பு: கானி ஸ்டூடியோஸ்
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார்
படத்தின் பிராண்டிங்: அர்சனா தினேஷ்
விளம்பரம்: ஸ்ருதி இல், சந்தேஷ் நந்தகுமார், நிஷா குமார், ராகவன் லக்‌ஷமன்
டிஜிட்டல் விளம்பரம்: எஸ்.ஐ.எல். ஸ்டூடியோஸ்