ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படமான ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!

56

CHENNAI:

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிங்ஸ்டன்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை  ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ படத்தை கிளாப் அடித்து, அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார்.

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. இப்படத்தில் ‘இசை அசுரன்’ ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் திவ்யபாரதி, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி,  சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் ஷாபுமோன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் வசனங்களை திவிக் எழுத, படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்கிறார். கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கையாள, அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்கிறார்.‌ கடல் பின்னணியில் திகில் சாகச படைப்பாக  தயாராகும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு கிரியேட்டிவ் புரொடியூசராக தினேஷ் குணாவும், நிர்வாக தயாரிப்பாளராக வெங்கட் ஆறுமுகமும் பணியாற்றுகிறார்கள்.

படத்தைப் பற்றி அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் பேசுகையில், ” என்னை போன்ற புதுமுக இயக்குநருக்கு ‘கிங்ஸ்டன்’ போன்ற கனவு திரைக்கதையை எழுதி இயக்கும் வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல. இந்த படைப்பு குறித்த எனது பார்வையை புரிந்துக் கொண்டு முழுமையாக நம்பி வாய்ப்பு வழங்கியதற்காக ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆகியோருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் ஆதரவுடன் இதனை சாத்தியமாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

ஜீ.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஜீ ஸ்டூடியோஸின் தென்னிந்திய திரைப்படப் பிரிவின் தலைவர் திரு அக்ஷய் கெஜ்ரிவால் பேசுகையில், ” ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் அவரது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் உடனான இந்த மதிப்புமிக்க படத்தில் எங்களுடைய பரிபூரண ஒத்துழைப்பு இருக்கிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஜீ.வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய பன்முக திறமையுடன், கமல் பிரகாஷ் இயக்கத்தில் இந்த திரைப்படத்தை வழங்குவது, எங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. கிங்ஸ்டனின் பிரம்மாண்டமான கதைக்களம் – ஒரு தனித்துவமான உலகில் அதன் பிரம்மாண்டமான தயாரிப்புடன் உருவாகி, பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்கும்  என உறுதியளிக்கிறது. ஜீ ஸ்டுடியோஸ்- மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் படைப்புகளை உருவாக்குவதே எங்களது நோக்கம். இந்த ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் அந்த வரிசையில் உருவாகும் அற்புதமான படைப்பாகும்” என்றார்.

தயாரிப்பாளராக அறிமுகமாவது குறித்து ஜீ.வி.பிரகாஷ் பேசுகையில், “தயாரிப்பாளராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்கான சரியான கதை அமைய வேண்டும். “கிங்ஸ்டன்” கதையைக் கேட்டவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கை கிடைத்தது, உடனடியாக தயாரிக்க முடிவு செய்து, பணிகளைத் தொடங்கிவிட்டேன். எப்போதுமே ஒரு படத்துக்கு ஆரம்ப புள்ளி என்பது மிகவும் முக்கியம். அப்படி எனது தயாரிப்பு நிறுவனத்தினைத் தொடங்கிவைத்து வாழ்த்து தெரிவித்துள்ள ‘உலக நாயகன்’ கமல்ஹாசனுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தினை என்னுடன் கைகோர்த்து தயாரிக்கவிருக்கும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கும் நன்றி. இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என்பதைத் தாண்டி தயாரிப்பாளராகவும் அறிமுகமாகும் எனக்கு உங்களுடைய அன்பும், ஆதரவும் தேவை” என்றார்.

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகும் ‘கிங்ஸ்டன்’ எனும் இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகிறது என்றும், இந்திய சினிமாவில் முதன்முதலாக கடல் பின்னணியில் திகில் சாகச படமாக இந்த திரைப்படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு  தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருவதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் முதல் முதலாக பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனத்தைத் தொடங்கி, அவருடைய 25ஆவது திரைப்படமான ‘கிங்ஸ்டன்’ படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிப்பதுடன் கதையின் நாயகனாகவும் நடித்து, இசையமைப்பது திரையுலகினரின் கவனத்தை கவர்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Zee Studios and Parallel Universe Pictures come together for India’s first Sea Horror Adventure film, ‘Kingston’, launched by Ulaganayagan Kamal Haasan

Music Director-Actor GV Prakash Kumar has achieved decorous stature of being acclaimed as a natural actor. He is now lining up a slew of projects that are based on different and unique story premises. He has now collaborated with a debut filmmaker Kamal Prakash for a movie titled ‘Kingston’, which features him as a content-driven protagonist. Ulaga Nayagan Kamal Haasan has unveiled the title look of this film. The ace actor took part in the movie launch of this film and clapped the board for the first shot and flagged off the shooting.

While G.V.Prakash Kumar plays the lead character, Divya Bharathi performs the female lead role opposite him. The others in the star cast include ‘Merku Thodarchi Malai’ fame Antony, Chethan, Kumaravel, Malayalam actor Sabumon, and many others.

Gokul Benoy is handling the cinematography and G.V. Prakash Kumar is composing music. Dhivek is penning dialogues, and San Lokesh is handling editing for this film. S.S. Moorthy is the art director and Dhilip Subbarayan is the action choreographer for this movie. ‘Kingston’, is a sea-adventure horror tale, produced by Zee Studios in association with G.V. Prakash Kumar’s Parallel Universe Pictures. Venkat Arumugam is the Executive Producer and Dinesh Guna is Creative Producer for this movie.

Director Kamal Prakash says, It isn’t that common to be given an opportunity to write and direct a dream script like “Kingston” for a newbie filmmaker like me. Would like to express extreme gratitude to G V Prakash and Zee Studios for completely trusting the vision, looking forward to making this a reality with the support of our extremely talented cast and crew!

Speaking about the association, Mr. Akshay Kejriwal, Head – South Movies, Zee Studios, says “We are extremely delighted and proud to announce our collaboration on this very prestigious milestone project with GV Prakash and Parallel Universe Pictures. GV Prakash has consistently enthralled audiences across the Globe with his versatility and it is our absolute honour and privilege to present this film helmed by the supremely talented, Kamal Prakash. Kingston’s compelling narrative set in a unique world coupled with its massive production scale, promises a cinematic experience that will captivate viewers. At Zee Studios, our aim is to create content that entertains and inspires people and this film is a positive step in that direction.

Producer-Actor-Music Director G.V. Prakash Kumar says, “It has been my lifelong dream to become a producer, and I was waiting for the proper story. After listening to the script of “Kingston” I was confident that it would appeal to the interests of audiences ranging from kids to adults. I immediately decided to produce it and commissioned the process. The starting moment of any film project needs to be special. I am so privileged and blessed to have our Ulaga Nayagan Kamal Haasan who has launched my production house and congratulated me for grand success. I am also thankful to Zee Studios who will be producing this film along with my production house. Everyone has encouraged and shown their love and support to my journey as music director and actor. Now I need the same for my new venture as a producer. Thank you all.”

The entire team of ‘Kingston’ is happy about the commencement of shooting, which they believe will offer them a vast scope to explore and exhibit their potential in a new-fangled genre of Sea-Adventure Horror Thriller.

Furthermore, G.V. Prakash Kumar has already struck everyone’s attention by launching his new production house – Parallel Universe Pictures which produces his 25th film ‘Kingston’.