புதிய டப்பிங் நிறுவனம் துவங்கினார் ‘கடாரம் கொண்டான்’ புகழ் நடிகர் விகாஸ் ஸ்ரீவஸ்தவ்!

58

CHENNAI:

‘கடாரம் கொண்டான்’ படத்தில் சியான் விக்ரமுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் நடிகர் விகாஸ் ஸ்ரீவஸ்தவ். தற்போது விகாஸ் ஸ்ரீவஸ்தவ் டப்பிங் கம்பெனி என்கிற பெயரில் சொந்தமாக டப்பிங் கம்பெனி துவங்கியுள்ளார்.

தனது இந்த புதிய துணிச்சலான முயற்சி குறித்து அவர் கூறும்போது, “கடந்த 22 வருடங்களாக ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் ஆகியவற்றில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்துள்ளேன். மணிரத்னம் சார், கமல்ஹாசன் சார், சியான் விக்ரம் சார், ஆமிர்கான் சார் அல்லது அவதார் & டோன்ட் பிரீத் புகழ் ஹாலிவுட் நடிகர் ஸ்டீபன் லேங் என இவர்கள் அனைவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

சினிமா என் நரம்புகளில் ரத்தமாக ஓடுகிறது. நான் விரும்பியபடி எனக்கு கதாபாத்திரங்களோ வேலையோ கிடைக்காதபோது நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அதனால்தான் விகாஸ் ஸ்ரீவஸ்தவ் பிலிம்ஸ் டப்பிங் நிறுவனத்தை 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். ‘தி காந்தி மர்டர்’ என்ற ஹாலிவுட் படத்தின் முழு டப்பிங் பணிகளையும் நான் தான் ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து கொடுத்தேன்.

மேலும் அவர் கூறுகையில், “அதைத் தொடர்ந்து கிச்சா சுதீப் மற்றும் உபேந்திரா நடித்த கன்னட ஹிட் படமான ‘கப்ஜா’வுக்கு ஹிந்தியில் டப்பிங் பேசினேன். தெலுங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விரைவில் வெளியாக உள்ள படங்களில் ஒன்றான ‘டைகர் நாகேஸ்வர் ராவ்’ படத்தில் 100க்கும் மேற்பட்ட டப்பிங் கலைஞர்களுடன் மாஸ் மகாராஜா ரவி தேஜா, நூபுர் சனோன் ஆகியோர் பங்குபெற்ற, தியேட்டர்களுக்கான இந்தி டப்பிங் பணியை இப்போது தான் முடித்தேன். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஏற்கனவே ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘கார்த்திகேயா- 2’, ‘வேக்ஸின் வார்’ போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர் வம்சி சார் ஏற்கனவே தெலுங்கில் 2 சூப்பர் ஹிட் படங்களைத் இயக்கியுள்ளார்..

டைகர் நாகேஸ்வரராவ், நிச்சயம் வரலாறு படைப்பார் என்பது என் கருத்து. தெற்கிலிருந்து ஹிந்திப் படங்கள் வரை டப்பிங் உலகில் ஒரு புரட்சியை என்னால் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன். ஏனென்றால் இன்றுவரை ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்ட அனைத்து தென்னிந்தியப் படங்களிலும் இயக்குநர் எதற்கு முதலிடம் கொடுத்திருந்தாரோ அந்த சாரம் இருப்பதில்லை. அவற்றின் நிஜத்தன்மையை தக்கவைத்து ஹிந்தியில் முழுமையாக அவற்றை மொழிமாற்றம் செய்வதே எனது நோக்கம். ஏனெனில் ஒரு வார்த்தை கூட படத்தின் மொத்த கருத்தையும் மாற்றிவிடும்., ஒரு இயக்குநர் ஒரு படப்பிடிப்பு தளத்தில் என்ன செய்வாரோ அதேபோல் தருவதற்கு எனது ஸ்டுடியோ மூலமாக நான் கடினமாக உழைக்கிறேன். ஒரு இயக்குநர் எழுதுவதற்கு சில மாதங்கள் ஆகும் ஒரு ஸ்கிரிப்டை நான் 30 நாட்களில் புரிந்துகொள்கிறேன். அதை இழுத்து வருவதற்கு ஒருவர் கதையைப் புரிந்து கொள்ள வேண்டும். இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றாலும் 22 வருடங்களாக நடித்துவரும் என்னைப் போல் ஒருவருக்கு ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.. நான் சில நிமிடங்களில் விளக்கிய இந்த விவரங்களை அக்-20ல் என்னுடைய ‘டைகர் நாகேஸ்வரராவை’ சந்திக்கும்போது நீங்கள் புரிந்துகொள்வீர்கள்” என்கிறார் விகாஸ் ஸ்ரீவஸ்தவ் மகிழ்ச்சியுடன்.