சென்னை:
இந்திய திரைப்பட உலகில் எந்த மொழியாக இருந்தாலும் ஒரு நடிகனாக உருவாக வேண்டும் என்றால் பல கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவித்த பிறகுதான் ஒரு வழியாக சிறந்த நடிகனாக உருவாக முடியும். அப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர்கள் பல கஷ்டங்களை அனுபவித்த பிறகு தான் இன்று முன்னணி நடிகர்களாக புகழில் உச்சியில் இருக்கின்றனர். அந்த வரிசையில் தெலுங்கு மொழியில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா போன்ற வெற்றி பெற்ற நடிகர்களுக்கு: பிறகு இன்று தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கிக் கொண்டிருப்பவர் பிரபாஸ். இந்திய திரையுலகில் இன்று புகழின் உச்சியில் இருக்கும் ஒரு நடிகர் யார் என்றால் அது பிரபாஸ் என்று தான் சொல்ல வேண்டும்.
இவர் தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்திருந்தாலும், அவர் நடித்த எந்த படங்களும் வெற்றி பெறாத அளவிற்கு ராஜமௌலி இயக்கத்தில் வெளி வந்த “பாகுபலி-Part1, Part 2’ படங்கள் மாபெரும் வெற்றி பெற்று அனைத்து இந்திய மொழிகளிலும் புகழின் உச்சிக்கு சென்றவர் பிரபாஸ். அந்தப் படம் வெளி வந்த பிறகு குறுகிய காலத்திலேயே இவரது புகழ் இந்திய திரைப்பட உலகில் மிக பெரிய அந்தஸ்தை பெற்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.. இதற்கு முக்கிய காரணம் இவரது கடுமையான உழைப்பும் இவர் தேர்வு செய்து நடித்த படங்களும் தான் காரணம். இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு.
பிரபாஸ் ஒரு தெலுங்கு நடிகர்தான் என்றாலும் உலக அளவில் உள்ள திரைப்பட ரசிகர்கள் மத்தியில் இவர் நடித்த படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து, அனைவரும் இவரது நடிப்பை ரசிக்கிறார்கள். இவர் ஒரு தயாரிப்பாளரின் மகன் என்றாலும் யாருடைய பின்புலமும் இல்லாமல் தனித்து போராடி இன்று இந்திய சினிமாவை ஏன் உலக சினிமாவை இவரது பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கின்ற அளவிற்கு புகழின் உச்சியில் இருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. இன்று பிரபாஸ் தனது 44வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளை அனைத்து இந்திய மொழி திரைப்பட ரசிகர்களும் இன்று மிக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
பிரபாஸின் 44-ஆவது பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடும் விதமாக, ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லியில் ரசிகர்கள் பிரமாண்டமான 230 அடி கட்அவுட் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. இன்னொரு பக்கம் பிரபாஸின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தெலுங்கானா-ஆந்திரா ஆகிய இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் பிரம்மாண்டமான மேடைகள் அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண விளக்குகள் வாணவேடிக்கையுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழும் ரசிகர்கள் மத்தியில் நமது சென்னைசுடர் வெப்சைட் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.