*தளபதி விஜய்* அவர்களின் சொல்லுக்கிணங்க.! இன்று *செங்கல்பட்டு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம்*

*தளபதி விஜய்* அவர்களின் சொல்லுக்கிணங்க.! இன்று *செங்கல்பட்டு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம்* சார்பாக, சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் மழை மற்றும் "மிக்ஜாம்" புயலில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு *அகில இந்திய பொது செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து* அவர்கள் நேரடியாக சென்று மேற்பார்வையிட்டு அரிசி, தார்பாய், பிரெட் பாக்கெட், பால் பாக்கெட், பிளாஸ்டிக் பாய், பெட்ஷீட், ஸ்டவ் ஆகியவற்றை வழங்கினார். அதனைத் தொடர்ந்து 150 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 15 வீடுகளுக்கு தார்பாய், 200 நபர்களுக்கு பிரெட் பாக்கெட், 200 நபர்களுக்கு பால் பாக்கெட், 50 நபர்களுக்கு பிளாஸ்டிக் பாய், 50 நபர்களுக்கு பெட்ஷீட், 5 நபர்களுக்கு ஸ்டவ் போன்றவைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு.சூரிய நாராயணன் அவர்கள் முன்னிலை வகித்தார். மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி தலைவர் திரு.M.S.பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு.மோகன்ராஜா, சித்தாமூர் ஒன்றிய தலைவர் திரு.அருள் மற்றும் நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். அதனைத்தொடர்ந்து வடசென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு *தளபதி விஜய் மக்கள் இயக்கம்* சார்பாக உணவு வழங்கப்பட்டது என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

40