Enga Veetla Party Movie Review – எங்க வீட்ல பார்ட்டி திரைவிமர்சனம்
புதுமுக நடிகர் நடிகைகள் ஒன்றாக இணைந்து நடித்த படம் எங்க வீட்ல பார்ட்டி. இக்கதையினை இயக்கி உள்ளார் கே.சுரேஷ் கண்ணா. இத்திரைப்படம் வெளியாகி இருக்கிறது வெற்றி பெற்றதா இல்லையா பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் ஏராளம் அதில் ஒன்று facebook அந்த முகநூலில் நாள் ஏற்படும் கதை தான் எங்க வீட்டுல பார்ட்டி. இன்றைய இளைஞர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களது வாழ்க்கை பாதை எவ்வாறு மாறுகிறது என்பதை சொல்லும் கதை. ஐந்து இளைஞர்கள், இரண்டு பெண்கள் முகநூல் மூலமாக பழக்கமாகி ஓரிடத்தில் சந்தித்து பார்ட்டி கொண்டாடுகிறார்கள். அதில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். அவளை யார் ? கொலை செய்தது, கொலை செய்ய காரணம் என்ன? என்பதை கண்டுபிடிக்கும் கதையே "எங்க வீட்ல பார்ட்டி. துப்பறியும் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் சிவப்பிரகாஷ் நடிக்க யாத்ரா, சாசனா, ஹன்சி வர்கீஸ், சக்தி, ஒமேரா மேத்வின், தயூப், சாய் சதீஷ், கார்த்திகேயன், சிபு சரவணன் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்துள்ளனர். இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே மிக நன்றாக நடித்துள்ளனர். இரண்டு கதாநாயகிகளும் இப்படத்தில் மிகத் துணிச்சலுடன் நடித்துள்ளனர். லெஸ்பியன்கள் கதாபாத்திரம் உணர்வுபூர்வமாக காண்பித்துள்ளனர். அவர்களது நடிப்பு பிரமாதம். இன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் ஏன் என்னென்ன நடக்கிறது அத்தனையும் இப்படத்தில் இயக்குனர் நன்றாக காண்பித்துள்ளார். இயக்குனருக்கு பாராட்டுக்கள். திரைக்கதையை நன்றாக நகர்த்தியுள்ளார். ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. இசை மற்றும் பின்னணி இசை ஓகே தான். பாடல்கள் சுமாராக உள்ளது. அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.